ரொம்ப நாட்களாக துணைவியுடன் சினிமாவுக்கு போகவில்லை என்பதை அவர்கள் ஞாபகப்படுத்தியவுடன்,நேற்று மதியம் மினி உதயத்தில் ஓடிக்கொண்டிருந்த "மொழி" தான் ஞாபகம் வந்தது.
மக்களிடையே மொழிக்கு கொஞ்சம் நல்ல பெயர் இருந்ததால் வேறு பக்கம் கண் செல்லவில்லை.
மதியம் முன் பதிவுக்கு போன போது மாலை 6.30 மணிக்கு அரங்கு நிரம்பி விட்டதால் 9.45 க்கு 2 சீட்டு வாங்கிக்கொண்டோம்.
சீட்டை வாங்கி கையை வெளியே எடுப்பதற்குள் மற்றொரு கை உள்ளே நுழைக்க சென்னைவாசி முயல,ஒரு சின்ன உரசல் அங்கு.வயதில் பெரியவராக தென்பட்டதால் வாக்குவாதத்தை தள்ளிப்போட்டேன்.
நம் மக்கள் ஏற்கனவே அக்கக்காக பிய்த்து எடுத்துவிட்டதால்,நான் அவ்வளவாக சொல்லப்போவதில்லை.
ஜோதிகா,இசையை உணர்ந்துகொள்ளும் சில நிகழ்வுகள் அட்டகாசமாக உள்ளது அதுவும் அந்த பாட்டி மடியில் படுத்துக்கொண்டிருக்கும் போது,காய்கறி நறுக்கும் போது என்று சில இடங்கள்.
படம் முழுவதும் நகைச்சுவை சரளமாக உள்ளது.
அவுங்க பலம் அதிலென்றால்...
நாங்கள் முன்னமே எதிர்பார்த்து கீழே உள்ள ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்றது வீன்போகவில்லை.
மற்றவர்கள், அதுவும் வெளிநாட்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்வது நலம்.
Friday, May 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பஞ்சு - ஓக்கே.
ஸ்கிப்பிங் கயிறு? படத்தில் உள்ள வேண்டாத சீன்களை ஸ்கிப் பண்ணவா?
இல்லே அக்கம் பக்கத்துலே இருக்கும் வேண்டாதவங்களைத் 'தூக்கவா?'
இல்லெ எல்லா சீட்களையும் தாண்டி உங்க சீட்டுக்குப் போகவா?
வாங்க துளசி..
அது ஸ்கிப்பி்ங் கயிறா?
காது அடைப்பானுங்க..
முதல் விளம்பரத்துக்கு உள்ள சொருகியது தான் கடைசி சீனுக்கு தான் வெளியே எடுத்தோம்.
அவ்வளவு ச....த்தம்.
Post a Comment