Wednesday, April 18, 2007

பாலியல்

இன்று காலை 7 மணிச்செய்தி கேட்டபோது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.இப்போதுள்ள பசங்களுக்கு ஒன்றும் இது பெரிய விஷயமில்லை தான்.நான் கொஞ்சம் அந்த கால ஆள் பாருங்க.வளர்ந்த சூழ்நிலை வேறு, அதனால் அதிர்ச்சியாக இருந்தது.

மேட்டருக்கு வருவோம்.காலை 7 மணிச்செய்தியை முழுவதுமாக கேட்கமுடியவில்லை.8 மணிச்செய்தியில் சுமார் 1 நிமிடத்துக்கு மேல்,அதுவும் முதன் முதலில் இந்த செய்தியை தான் கொடுத்தார்கள்.

ஆதாவது Durex கம்பெனி இணையத்தில் நடத்திய ஆய்வின்படி எந்த நாட்டு மக்கள் அதிகமாக உடலுறவு கொள்கிறார்கள்,எவ்வளவு நிமிடங்கள்,நம் நாடு எந்த நிலையில் இருந்தது இப்போது எங்கு முன்னேறியுள்ளது மற்றும் வருடத்துக்கு எவ்வளவு முறை உடலுறவு கொள்ளுகிறார்கள்,எதனால் நம்மால் செய்யமுடியவில்லை,எவ்வளவு சதவீத மக்கள் முழுமையாக திருப்தி அடைந்தார்கள்? என்பதை விலாவாரியாக சொல்லி முடித்தார்கள்.சொன்னதெல்லாம் ஒரளவு ஞாபகம் இருந்தாலும் இங்கு வேண்டாம்.

இது இன்றைய தலையாய பிரச்சனை போல்.எனக்கு கொடுமையாக இருந்தது.இப்படி சொல்வதால் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.எல்லோரும் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவார்களா? அல்லது இனிமேல் கூட நேரம் எடுத்துக்கொள்வார்களா?

இயற்கையான நிகழ்வுகளை இப்படி பட்டியல் போடுவதில் என்ன லாபம் என்று தெரியவில்லை.

அப்படியே Today செய்தித்தாளை பார்த்தால்...

உங்கள் பார்வைக்கு கீழே..



படம்:நன்றி TODAY

உலகம் எங்கோ போய்கொண்டிருக்கிறது.

6 comments:

துளசி கோபால் said...

இந்தியாவில் ஜனத்தொகை எகிறிக்கிட்டு இருக்கே பார்த்தீங்களா?

கொஞ்சம்கூட ப்ரைவஸி இல்லாத வீடுகளில் ........................!!!!!

சௌ.பெருமாள் said...

துளசி
நேற்று தான் அப்படி என்றால்,இன்று காலை வெளிச்சம் என்ற பகுதியிலும் இதே செய்தி தான்.இங்கு பிரச்சனை அதிகமாக இருக்கு போல.
அதான் தலைப்புச்செய்தியாக சொல்கிறார்கள் போலும்.
சீனா,மலேசியா,இந்தோனேஷியா மற்றும் நம் நாடுகளை அடிச்சிக்க முடியாது.ஆனா சீனா தான் பாவம்.

இலவசக்கொத்தனார் said...

இதில் என்ன தப்பு எனத் தெரியவில்லை. அத்தனை பிரச்சனை இருக்கும் நைஜிரியா ஆகட்டும் இந்தியா ஆகட்டும், அவர்களே அவ்வளவு நிம்மதியாக இருக்கும் பொழுது வசதியாய் இருக்கும் உனக்கென்ன பிரச்சனை என சிங்கை மக்களை எச்சரிப்பது போல் இருப்பது சரிதானே?

சௌ.பெருமாள் said...

வாங்க இ.கொத்தனார்.
அன்று காலை வேறு எந்த உலக நடப்பும் முதல் பிரச்சனையாக தெரியவில்லை.இங்கு கலவி செய்வது 3 இடங்கள் முன்னேறி 22 இடத்துக்கு வந்திருப்பதாகவும்,26% மக்கள் தான் முழு திருப்தி அடைந்தார்கள் என்று புட்டு புட்டு வைத்தார்கள்.கேட்கவே என்னவோ மாதிரி இருந்தது.
அதைச்சொல்லி என்ன சாதிக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.
இங்கு வசதியாக இருப்பதே பிரச்சனை,ஒரு வீட்டில் வாழும் பலரும் தனித்தனி தீவில் வாழ்வது போல் வாழ்கிறார்களோ என்ற சந்தேகம் உண்டு.

வைசா said...

இங்கும் நாளொன்றுக்கு இதுபோல எத்தனையோ உப்புச்சப்பில்லாத ஆய்வுகளைச் சொல்லிப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒன்று அது முதல் செய்தியாக இடம் பிடிக்காது. வெட்டிப் பேச்சு இல்லாத சிங்கப்பூரிலா இப்படி?

வைசா

சௌ.பெருமாள் said...

எனக்கும் ஆச்சரியம் தான் வைசா.ஆனால் பொதுவாகப்பார்த்தால் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் இருக்கலாம்.
கல்யாணமும்,விவாகரத்தும் இங்கு சம நிலையில் இருக்கும் போல.