Tuesday, April 17, 2007

பத்துக்கோவா பாலம்

போன பதிவில் அதன் இருப்பிடம் பார்த்தோம்.
இப்போது அதன் வேலையை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
இந்த வேலை எல்&டி க்கு Inter Trade Contract மூலம் கிடைத்தது.ஆதாவது இந்திய மற்றும் மலேசிய அரசாங்களுக்கு இடையே வர்தக பரிமாற்று முறையில் கிடைத்தது.சுமார் சில 180 மில்லியன் கட்டுமானம் என்று நினைக்கிறேன்.சரியாக நினைவில்லை.அன்றைய நிலவரப்படி மாற்றினால் 18 கோடி ரூபாய் வரும்.

மேலே உள்ளது அங்கு கட்டப்பட்டது இல்லை.தகவலுக்கு மட்டுமே.

இந்த பாலம் சரவாக் மாநில தலைநகரமான குச்சிங்கையும் பக்கத்தில் உள்ள பத்துக்கோவா மற்றும் மிரி என்கிற ஊரையும் இணைக்க மிக அவசியமான ஒன்றாக இருந்தது.இது கட்டப்படும் வரை படகுச்சேவை மூலம் மக்கள் அக்கரையை கடந்தனர்.

ஆற்றின் அருகில் வசிக்கும் பலரிடையே படகு இருந்தது,அதுவில்லாமல் ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் வெகு தூரம்.காட்டுக்குள் நடப்பது மாதிரி இருக்கும்.குடிக்க தண்ணீர்?
நம்மூர் மாதிரி கிணறு வெட்டி அங்கிருந்து பயண்படுத்துகிறார்கள்.இது நகரத்தில் இருந்து வெகுதூரம் உள்ள வீடுகளுக்கே பொருந்தும்.நகர்புறங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் மூலம் தான் குடிதண்ணீர் வருகிறது.

இந்த பாலம் சுமார் 250 மீட்டர் நீளம் கொண்டது.ஆற்றில் நடுவே 3 தூண்களும்,ஒரு பக்க நிலத்தில் 2ம் மற்றொரு பக்கத்தில் ஒன்றும் இருந்தது.


நான் போகும் முன்பே பாலத்துக்கும் நிலத்துக்கும் இணையும் இடமான "Embankment" என்ற பகுதியில் மண்ணைக்கொட்டி சமப்படுத்தி இருந்தார்கள்.பாலம் கட்டுமானத்தில் இதைத்தான் முதலில் செய்யவேண்டும்.ஏனென்றால் நாளை பால வேலைகள் கட்டி இணைக்கும் போது இது இறங்காமல் இருக்க முதலிலேயே செய்துவிட்டால் இயற்கையாக எவ்வளவு தூரம் இறங்குமோ(Settlement),அவ்வளவு இறங்கிவிடும்.

இதை ஒழுங்காக செய்திருக்கோமா என்று சோதனை செய்ய சில வழி முறைகள் உள்ளது.Core Test என்கிற முறைப்படி,ஒரு உருளை பைப்பை மண்ணில் இறக்கி அதன் மூலம் மண்ணை எடுத்து அதன் நிறை மற்றும் Moisture Content மூலம் முடிவுசெய்வார்கள்.

அடுத்த முக்கியமான வேலை ஆற்றில் செய்யப்போகிற வேலை தான்.

இந்த ஆற்றில் உள்ள 3 தூண்களும் பைலிங் என்ற முறைப்படி ஆற்றின் கீழ் உள்ள கெட்டியான மண் வரை இரும்பு தூண்களை இறக்கி,தேவையான Anchors வைத்து கான்கிரீட் போடுவோம்.

ஆற்றில் எப்படி வேலை செய்வது என்று பார்ப்போமா?

வாங்க அடுத்த பதிவுக்கு.

2 comments:

துளசி கோபால் said...

இது pier கட்டும் முறையில்தான் கட்டறீங்களா? அதெப்படிக் கடலில்
காங்க்ரீட் தூண்கள் நிக்குதுன்னு எனக்கு எப்பவும் கொஞ்சம் ஆச்சரியம்தான்!

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
அது அடுத்த பதிவில் விரிவாக.
இது நதியில்,அதையே கடலில் கட்டுவது இன்னும் கொஞ்சம் சிரமம் மிகுந்த பணி.
ஆனால் கான்செப்ட் எல்லாம் ஒன்று தான்.
ஊருக்கு போய் வந்த பிறகு தான் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.