Thursday, April 12, 2007

மலேசியாவில்

அன்கலேஷ்வரில் இருந்து திரும்பி வந்த போதும் கூட மலேசியா பயணம் என்று தெரியாத நிலையில் தினமும் தலைமை அலுவலகம் போய் வந்துகொன்டிருந்தேன்.

கடைசியாக ஒரு 15 நாள் நேரம் கொடுத்து தயாராக இருக்கச்சொன்னார்கள்.கையில் பயணச்சீட்டு வந்தவுடன் தான் நம்பிக்கை வந்தது.

நாங்கள் வேலை செய்யப்போகும் இடம் கிழக்கு மலேசியாவில் உள்ள சரவாக் மாநிலத்தின் தலைநகரில்.தலைநகர் பெயர் "கூச்சிங்" ஆதாவது பூனை என்று அர்த்தமாம்.இந்த கூச்சிங்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் பத்துக்கோவா.அங்கு தான் எங்கள் வேலை.இங்கு சுங்கை சரவாக் என்ற சின்ன நதி மீது ஒரு பாலம் கட்டவேண்டியது தான் எங்கள் பணி.சுங்கை என்றால் நதி/ஆறு என்று பொருள்,மலாயில்.

வீட்டுக்கு வந்து பெற்றோரிடமும்,மனைவியிடம் சொன்னதும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.இது ஒரு பெரிய கம்பெனியின் அங்கீகாரம்.யாருடைய ரெக்கமன்டேசன் இல்லாமல் வெறும் வேலையை மட்டும் காட்டியதற்கு கிடைத்த பரிசு.அனுபவித்தேன்.:-))

என்னுடன் மேலும் இருவர் வந்தனர்,ஒருவர் திரு.தாப்பா (Planning Engineer), மற்றொருவர் திரு.தம்பி வர்கீஸ்.

சென்னையில் இருந்து கிளம்பி கோலாலம்பூர் வந்து அங்கிருந்து வேறு ஒரு வானூர்த்தி எடுத்து கூச்சிங் வந்து சேர்ந்தோம்.பத்துக்கோவா நாங்கள் வேலை செய்த இடம்.

குச்சிங்(பத்துக்கோவா) எங்க இருக்கு? கீழே பாருங்க.



இன்னும் பல இடங்கள் மனிதனின் கைப்படாத இடமாக இருக்கிறது.மாலை 7 மணிக்கெல்லாம் கூட்டம் குறைய ஆரம்பித்துவிடும்.



மேலே உள்ள படத்தில் பின் போட்டு காண்பித்துள்ள இடம் தான் நாங்கள் வேலை செய்த பாலம் உள்ளது.கூகிள் எர்த்தில் அந்த இடம் இன்னும் சரியாக ரெண்டர் பண்ணாததால் சரியாக தெரியவில்லை.



மேலே இருக்கும் இதுவும் கூகிள் எர்த்தில் இருந்து எடுத்த படம் தான்.இந்த இடம் நாங்கள் வேலை செய்த பாலத்துக்கு பக்கத்தில் மணல் அள்ளிக்கொண்டிருக்கும் இடம்.பார்ஜும் அதன் மேலே இருக்கிற பாரம் தூக்கியும் தெரிவதை பார்க்கவும்.

இதை எதற்கு இங்கு காண்பிக்கிறேன் என்றால் இவர்கள் மூலம் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.அதை பிறகு சொல்கிறேன்.






மேலே உள்ள படம் கூச்சிங்கில் உள்ள சிவிக் டவர் என்னும் இடம்.அப்போது உயரமான இடம்.இப்போது எப்படி என்று தெரியவில்லை.

அடுத்த பதிவில் சைட்டின் உள்ளே போகலாம்.

3 comments:

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா.

நன்றி - கூகிள் ரீடர்

துளசி கோபால் said...

கூச்சிங் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. நம்மூட்டு கூச்சிங்கிட்டேயும் சொல்லிட்டேன்:-))))) மியாவ்......

கடைசிப்படம் டவர் அழகா இருக்கு.


தமிழ்மணத்துலே இருந்தா 'டக்'ன்னு புதுப்பதிவு கண்ணுலே பட்டுருக்கும்.
போட்டும், பேசாம ஒரு மெயில் அனுப்புங்களேன், புதுசு போடும்போது.

சௌ.பெருமாள் said...

ஓகே,சொல்லிடுகிறேன்.
நீங்கள் கூகிள் ரீடர் உபயோகிக்கிரீர்களோ என்று நினைத்தேன்.