போன பதிவில் ஆற்றின் மேல் எப்படி வேலை செய்வதை இங்கு சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
அதற்கு முன்னால் இதன் Design ஐ கொஞ்சம் பார்த்திடுவோம்.
இந்த ஆறு, படகுகள் மற்றும் பார்ஜ் என்று சொல்லப்படுகிற தெப்பத்தையும் போக்குவரத்துக்கு இதில் உபயோகப்படுத்துவார்கள்.இந்த தெப்பத்தில் மணல்,ஜல்லி & மரங்கள் அடுக்கி நதி மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வார்கள்.அதனால் நதியின் உள்ள கான்கிரீட் தூண்களை இந்த மாதிரி தெப்பம் வந்து மோதினாலும் தாங்கக்கூடிய அளவில் டிசைன் செய்திருப்பார்கள்.
இந்த இடத்தில் மண் சுமார் 5 மீட்டருக்கு களிமண் போலவும் அதற்கடுத்து கொஞ்சம் கெட்டியாகவும் இருந்தது.பழைய காலத்தில் இந்த நதி மூலம் மர வியாபாரம் நடந்ததால் கரையில் பல வருடத்து மரங்கள் புதையுண்டு கீழே இருந்தது.இன்றும் எப்போதாவது மழை அதிகமாகி வெள்ளம் வரும் சமயங்களில் பெரிய மரங்கள் அடித்துக்கொண்டு வருவதை காணலாம்.
இந்த ஊர் நிலவரப்படி நல்ல மண்ணில் ஊடுருவி பாலத்தின் பாரத்தை நல்ல தேர்ந்த பாறையில் விட வேண்டும் என்பதால் பைலிங் என்று சொல்லப்படுகிற முறைப்படி டிசைன் செய்தார்கள்.
பைல் (Pile) என்ன என்பதை இங்கு முன்பே சொல்லியுள்ளேன்.
ஆதாவது பைல் அடித்து அதன் மேல் அஸ்திவாரம் கட்டி,தூண் எழுப்பி அதன் மேல் சாலை அமைக்க உத்தேசித்திருந்தார்கள்.
இங்கு நாங்கள் 2 வகை பைல் உபயோகித்தோம்,
1.Closed Pile
இதன் கீழ் முனை மூடி இருக்கும்.இதன் மீது வரும் எடையை அப்படியே கீழே அனுப்பிவிடும்.அடித்து முடிந்த பிறகு உள்ளே கான்கிரீட் போட்டால் முடிந்தது வேலை.
2.Open ended Pile.
இதன் கீழ் முனை திறந்திருக்கும்,அதனால் அதிக ஆழம் போகக்கூடியது.இதை அடித்துமுடிந்தவுடன்,Rock anchor என்ற முறைப்படி அதனுள் அதிக ஸ்ட்ரென்த் உள்ள கம்பியை நல்ல பாறையில் நுழைத்து கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.
நதியின் நடுவில் உள்ள தூணின் பருந்துப்பார்வை.
இதில் சிகப்பு கலரில் உள்ளது சாய்வாக இரக்கப்படும் பைல்.படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.
மேலே உள்ள படத்தில் காண்பது தான் ஸ்டீல் பைல்.சாய்வான முறையில் அடிக்கப்பட்டுள்ளது.
மீதி அடுத்த பதிவில். (சென்னையில் இருந்து)
Friday, April 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஊருக்குக் கிளம்பியாச்சா?
நல்லபடி போயிட்டு வாங்க.
படங்கள் பார்த்தாலும் சரியாப் புரியலை(-:
அது இருக்கட்டும். எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க.
நல்ல பதிவு.... கொஞ்சம் கஷ்டமா இருக்கு, இரண்டு மூன்று முறை படித்தால் கிளியரா புரியும்.
இந்திய பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்
ஆமாங்க துளசி
வந்து சேர்ந்து,பிளாக்கர் மீட்டிங்கும் பார்த்துவிட்டு வந்துவிடேன்.
நீங்கள் விஜாரித்தாக எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்.
நன்றி சிவா,முடிந்தால் சந்திக்கலாம்.
இந்த pileகள் அடிக்கப்படும் போது அவற்றின் கீழே புதையுண்டிருக்கும் மரங்களை (அப்படி இருந்தால்) தோண்டி எடுத்துவிட்டுத்தான் செய்வீர்களா? இல்லாவிடில் பைல்கள் ஆடிப்போவதற்கு சந்தர்ப்பம் உண்டல்லவா?
வைசா
நல்ல கேள்வி திரு வைசா,
நாங்களும் இந்த விதத்தில் மாட்டினோம்.
இந்த பைல்கள் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு அடித்தே ஆகவேண்டும்.மரங்கள் மாட்டினால்,அதை எடுத்துவிட்டு தான் அடிக்கவேண்டும்.
எங்களுடையது ஓப்பன் என்ட் என்பதால்,மரத்தையும் உடைத்துக்கொண்டு போய்விட்டது.
Post a Comment