Sunday, April 27, 2008

கோயம்பேடு

திருச்சிக்கு போய் மச்சினரை பார்க்கனும் என்று பயணவிபரம் முடிவானவுடன், பக்கத்தில் உள்ள கோயம்பேடு CMBT என்று அழைக்கப்படுகிற சென்னை மொபசேல் பேருந்து நிலையத்துக்கு மாலை 4 மணிவாக்கில் போனேன்.
சிறிது நேரம் இடம் தேடி அலைந்த பிறகு திருச்சிக்கு செல்ல முன்பதிவு நிலையத்துக்கு முன்பு நின்றேன்.மூன்று வரிசை இருந்தது.ஒரு ரூபாய் கொடுத்து முன்பதிவு விண்ணப்பத்தாள் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றேன்.எப்போதும் போல் என் வரிசை மட்டும் மெதுவாக நகர்ந்து 30 நிமிடங்கள் கழித்து என் முறை வந்தது.நல்ல வேளையாக அன்றிரவே 11 மணிக்கு உள்ள பேருந்துவில் இடம் கிடைத்தது.

அன்றிரவு மற்றொரு உறவினர் வீட்டில் சாப்பாடு என்பதால் வீட்டு வேலைகள் அவ்வளவாக இல்லை.அந்த சாப்பாட்டை முடித்துக்கொண்டு இரு சக்கர ஊர்தி மூலம் பேருந்து நிலையத்தை அடைந்த போது மணி 22.30.

நமக்கு 11 மணி வண்டி தானே என்று பயணிகள் உட்கார்ந்து இளைப்பாரும் இடத்தில் நானும் என் மனைவியும் உட்கார்ந்திருந்தோம். ஒரு 15 நிமிடம் கழித்து பேருந்து இருக்கும் இடத்துக்கு போய் எங்கள் பேருந்து எங்கிருந்து என்று தேடிக்கொண்டிருந்தால்.... ஒவ்வொரு பேருந்து முகப்பு கண்ணாடியில் சுண்ணாம்பில் அந்த வண்டி கிளம்பும் நேரத்தை எழுதிவைத்திருந்தார்கள்.ஒரு வண்டியில் 22.00 என்று போட்டிருந்தது.அப்போது மணி 22.45.என் சந்தேகத்தை நிவர்த்திபண்ண அங்கிருக்கும் ஒரு நடத்துனரிடம் கேட்ட போது " ஆமாம்" இது தான் சரியான நேரம் என்றார்.அதற்குப்பிறகு தான் தெரிந்தது எல்லா வண்டிகளும் கால தாமதமாக புறப்பட்டு போய்கொண்டிருக்கிறது என்று.

கீழே உள்ள படத்தை பாருங்கள்,இது 22.15 க்கு போகவேண்டிய வண்டி அது 23.15 வரை கிளம்பவில்லை.காரணம் என்னவாக இருக்கும்.அதிகாரபூர்வமற்ற மனிதர் ஒருவர் காக்கிச்சட்டையில் இருந்து விட்டது, "பத்து மணி ஓட்டுனர் குடித்துவிட்டு,தூங்கிட்டாராம்!!"




நல்ல வேளை வண்டி ஓட்டவில்லை.ஓட்டியிருந்தால்...பயணிகள் கதி அதோகதியாகியிருக்கும்.

அதன் பிறகு ஒவ்வொரு பேருந்தாக கால தாமத்துடன் கிளம்பிக்கொண்டு இருந்தது,இந்த மாதிரி சாமயங்களில் அங்குள்ள விவரபலகையில் ஏதோ Null என்று வந்துகொண்டிருந்ததே தவிர எப்போது வரும் என்ற விபரங்கள் இல்லை.




பாவம் ஒருவர் மாத்திரம் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு இந்த வண்டி 10.30 வண்டி இது 10.45 வண்டி என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக எங்கள் இரவு 11 மணி வண்டி நள்ளிரவையும் தாண்டி சுமார் 12.30 க்கு வந்து 12.45 கிளப்பினார்கள்.

வழியெங்கும் சாலைப்பணிகள் நடப்பதால் அங்கங்கு நிறுத்தி நிறுத்தி ஒருவழியாக டோல்கேட்டை அடைந்த போது காலை 9 மணி.இரயிலில் 6 மணி நேரப்பயணம் பல காரணங்களால் 8 மணிக்கும் மேல் ஆனது.

கால தாமதங்கள் ஆகும் போது பயணிகளுக்கு கொடுக்கவேண்டிய அறிவிப்பு கூட செய்யாதது நாம் இன்னும் போகும் தூரம் அதிகமாக உள்ளதாகவே படுகிறது.

போகும் வழியில் எடுத்த சில படங்கள்...

இது பொழிச்சலூரில் உள்ள பழைய பாலம்.



வழியில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி.

2 comments:

திவாண்ணா said...

அட பெருமாளு! இதெல்லாம் எங்களுக்கு பழகிப்போனதுதானே! நீங்க வெளியூர் போய் "கெட்டு" போயிட்டீங்க போலிருக்கு!

சௌ.பெருமாள் said...

ரொம்ப கெட்டுப்போகாம இருக்க ஊருபக்கம் வந்த இப்படி இருக்கு...திவா
:-))