Friday, April 11, 2008

பற்றவைப்பு

கேப்பிட்டல் டவர்

போன பதிவில் இங்கு வேலை செய்வது பற்றி சொல்லியிருந்தேன்.

மிக முக்கியமான வேலை இந்த பைப் Column ஐ வெல்டிங் செய்வது தான்.அதற்குப்பிறகு அதை பரிசோதனை செய்யவேண்டும்.எல்லா பற்றவைப்பு வேலைகளையும் பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லாத்தால் மேலிடத்தில் குத்துமதிப்பாக எடுக்கும் தூண்களில் செய்யப்படும் வேலையை பரிசோதிப்போம்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்




கலரில் காண்பித்து இருக்கும் பகுதி பற்றவைப்பு வேலை சிறிது சிறிதாக முன்னேறுவதை காண்பிக்கிறது.

பற்ற வைப்பு வேலைகளில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது அதன் நேர்தன்மையை அல்லது அதன் நிலையை.பற்றவைப்பில் அதிக வெப்பம் வெளிப்படும் என்பதால் அதற்கு தகுந்த மாதிரி வெல்டிங் வேலையை செய்வார்கள்.ஒரு தூணுக்கு இருவரை பற்றவைப்பில் ஈடுபடவைப்பார்கள்.இப்படி செய்வதால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.அடுத்து அதன் மேல் முனையை கட்டுப்படுத்த இரும்புக்கயிறு போட்டு கட்டிவிடுவார்கள் அல்லது ஒரு பீமை கான்கிரீட் கட்டிடத்துடன் இணைத்துவிடுவார்கள்.

பற்றவைப்பு மற்றும் டெஸ்டிங் வேலை முடிந்தபிறகு அதனுள் கம்பி வைத்து (சிலவற்றில் கிடையாது) கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.Column Ready.இதன் உயரம் 6 மீட்டர் இருப்பதால் ஒரே சமயத்தில் இரு தளத்துக்கு தேவையான Column தயாராகிவிடுவதால் இம்முறை பெரிதும் விரும்பப்படுகிறது.கான்கிரீட்டிலே முழுவதும் செய்யவேண்டும் என்றால் இதைவிட அதிக நேரம் பிடிக்கும்.

இந்த தூண் பற்றவைப்பு முடிந்த பிறகு அதையும் மத்தியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடத்தையும் இணைக்கும் படி இரும்பு பீம்களை நிறுவுவார்கள். அதன் மீது பாண்டெக் என்று சொல்லப்படிகிற ஷீட்டை போட்டு அதன் மீது கான்கிரீட் போடுவார்கள்,அவ்வளவு தான் ஒரு தளம் தெரியாகிவிடும்.இதைப் போல் ஒவ்வொரு தளமும் தயார் செய்யவேண்டியது தான்.கீழே உள்ள படத்தில் பாண்டெக் என்று சொல்லப்படுகிற Roofing Sheet யும் பார்க்கலாம்.



ஸ்டீல் பீமையும் இந்த தள கான்கிரீட்டையும் இணைக்க அந்த பீமின் மேல் Shear Stud என்ற போல்டை பற்றவைப்பார்கள்.



இங்கு நடந்த மற்றொரு முக்கியமான நிகழ்வை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

2 comments:

திவாண்ணா said...

அதாவது பொட்டி கட்டி காங்கிரீட் போடாம ஸ்டீல் பைப்லேயே போட்டு அப்படியே விட்டு விடறீங்க. அப்படித்தானே? ஸ்டீல் வெய்யில்லே விரிந்தா பிரச்சினை வராதா?

சௌ.பெருமாள் said...

வாங்க திவா
அப்படியேத்தான்.அந்த விரிவு அவ்வளவாக பாதிக்காது.அதுவும் கட்டிடத்தை சுற்றி Cladding வந்துவிட்டால் அப்புறம் AC க்குள் தானே இருக்கப்போகிறது!!