Tuesday, December 18, 2007

மீண்டும் இந்தியாவுக்கு

ஒரு வார கால அவகாசத்தில் சிங்கை வந்திருந்தால் வந்த உடனே குளித்து அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு அந்த பெரியவரிடம் தேவையா விபரங்கள் வாங்கிக்கொண்டு வெளியில் கிளம்பினோம்.

சோற்றால் அடித்த ஆட்கள் நாம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக என் பையன் வீட்டு சாப்பாடு சாப்பிட்ட பிறகு தான் அவன் முகத்தில் தெளிவு வந்தது.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம் என்று சுழன்று பார்த்துக்கொண்டு இருந்தோம் அதோடில்லாமல் இனிமேல் இங்கு எங்கு வரப்போகிறோம் என்ற நினைப்புடன் சாமான்களும் வாங்கிக் குமித்தோம்.

இதற்கிடையில் கோலாலம்பூரில் விட்டுப்போன நேர்காணல் நிறுவனத்துக்கு போய் நான் நேர்காணலை தவற விட்ட சேதியை சொல்லி இங்கு செய்ய முடியுமா? என்றேன்.வாசலில் உட்கார்ந்திருந்த பெண் "நாங்கள் வெளியூர்காரர்களை" வேலைக்கு எடுப்பதில்லை என்று சொன்னார்.ஒன்றும் கெட்டுவிடவில்லை எப்படியும் வேலை இருக்கிறது என்ற நினைப்புடன் நன்றி சொல்லி வெளியில் வந்தேன்.

அப்போது நாங்கள் பார்த்த இடங்கள்.
பறவை பூங்கா (கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்)- ஒரு பெரிய வலைக்கூண்டுக்குள் பல பறவைகளை சுதந்திரமாக பறக்கவிட்டபடியால் நமக்கு அருகே பல பறவைகள் பறப்பது ஏதோ காட்டின் உள்ளே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.பறவைகளை வைத்து பல நிகழ்ச்சிகளும் இருக்கும்.ஒரு நாள் நிம்மதியாக செலவு செய்யலாம்.

செந்தோஷா- இது ஒரு குட்டித்தீவு.நான் போன போது பலவகை மீன்களை பெரிய கண்ணாடி தொட்டியில் விட்டு குகை மாதிரி வழியில் நகரும் மேடையை அமைத்து தண்ணீரில் நனையாமல் எல்லா மீன்களையும் பார்க்கலாம்.இது எனக்கு மிகவும் பிடித்த இடம்.ஆனால் என்ன நுழைவுக்கட்டணம் தான் கொஞ்சம் பயமுடுத்தும்.புதிதாக வருபவர்களுக்கு அவ்வளவாக தெரியாது இங்குள்ளவர்களுக்கு "இவ்வளவா?" என்று அயர்சியாக இருக்கும்.இங்கும் முழு நாளை செலவு செய்ய பல நிகழ்ச்சிகள்/பல இடங்கள் உள்ளது. இப்போது இன்னும் ஏதேதோ வந்துவிட்டது.தினம் மேம்பாட்டு பணிகள் நடந்துவருகிறது.

உயிரியல் பூங்கா: எல்லா ஊர்களில் உள்ள மாதிரி பல விதமான மிருகங்களை பார்க்கலாம்.கொஞ்சம் சுதந்திரமாக விட்டுவைத்திருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் இது.
ஒரு வேளை "நாகை சிவாக்கு" உதவும்.மலைப்பாம்பை கையில் வைத்துக்கொள்ளலாம்,ஊரங் குட்டனுடன் சாப்பிடலாம் என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன.இங்கும் ஒரு நாள் செலவழிக்க முடியும்.



சயின்ஸ் சென்டர்:(அறிவியல் பூங்கா): குழந்தைகள் அறிவை வளர்க்கும் பல புதுமையான வழிகளில் அறிவியல் விளக்கும் இடம்.

ஐஸ் சிட்டி: சுமார் 2~5 சென்னிகிரேட் வெப்பம் உள்ள ஒரு அறையில் பனியை வைத்து சறுக்கி விளையாடலாம்.

சிரங்கூன் சாலை: பல சாமான்கள் வாங்க/கோவிலுக்கு போக என்று ஒரு நாள் ஒதுக்கினாலும் போதாது.பிரபல முஸ்தாபா கடைத்தொகுதி இங்கு தான் இருக்கு.1995 யில் பார்த்ததற்கும் இப்போதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் தெரிகிறது.




பல இடங்கள் இருந்தாலும் செலவழிக்கும் திறனை வைத்து தேவையான நாட்கள் இருக்கலாம்.

ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து ஊர் திரும்பினோம்.விடுமுறை இன்னும் 1 வாரம் இருந்ததால் சில விருந்தினர் வீட்டுக்கு போய் அவர்களை பார்த்துவிட்டு வந்தோம்.

கம்பெனியில் திரும்ப சேரும் நாளும் வந்தது. போனேன்.. முகமன் முடிந்து வேலை பற்றிய விஜாரிப்புகள் தொடங்கின.தற்போது சென்னையில் வேலை எதுவும் இல்லை அதனால் நீ அங்கு போ என்றார்.

செம கோபம். மீதி அடுத்த பதிவில்.

4 comments:

கோவி.கண்ணன் said...

//கம்பெனியில் திரும்ப சேரும் நாளும் வந்தது. போனேன்.. முகமன் முடிந்து வேலை பற்றிய விஜாரிப்புகள் தொடங்கின.தற்போது சென்னையில் வேலை எதுவும் இல்லை அதனால் நீ அங்கு போ என்றார்.

செம கோபம். மீதி அடுத்த பதிவில்.//

குமார்,

உங்களை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன்...பயங்கர அமைதியாக இருக்கிங்க...கிண்டல் செய்தாலும் கோபம் வருவது அறிதாக தெரிந்தது...ஒருமுறை வரவனையான் 'அனுமோகன் மாதிரி இருக்கிங்க' என்று அவர் சொன்னபோது கோவப்பட்டது போல் தெரிந்தாலும் அப்பறம் உடனே 'சொல்லிட்டு கிண்டல் செய்யுங்கப்பா' என்றீர்கள் உங்களுக்கு செம கோபம் கூட வருமா ? வியப்பாகத்தான் இருக்கிறது.

துளசி கோபால் said...

செந்தோஸாவில் நல்லாவே பொழுது போகும்.

சிங்கையை ஒரு சுத்து சுத்தவச்சுட்டீங்க. நன்றி.

பொட்டானிக்கல் கார்டன் என்னோட லிஸ்ட்லே இருக்கு.

சௌ.பெருமாள் said...

வாங்க கோவியாரே
இது நடந்து 13 வருடங்கள் ஆகிவிட்டதே.அப்ப இருந்த சூடு இப்ப கொஞ்சம் தணிந்துவிட்டது போல.
அந்த வரவனையான் விஷயமா? முதல் பின்னூட்டம் எனக்கு கோபத்தை வரவழைக்கவில்லை திரும்ப இரண்டாம் முறை கேட்கப்பட்ட போது தான் ஏதோ உள் நோக்கம் இருக்குமோ என்ற எண்ணம்,சரி நேரிடையாகவே பேசிடலாமே என்று அவர் தூக்கத்தை கலைத்தேன்.ஒரு ஸ்மைலி போட்டிருந்தால் நானும் மறந்திருப்பேன்.
ஆமாம் இந்த அனுமோகன் யார்? என்னைப்போல் ஒருவர்! இதற்காவது மறுபடியும் அந்த படத்தை பார்க்கவேண்டும்.இவரும் வலைப்பதிந்து குழப்பத்தை உண்டுபண்ணிவிட போகிறார். :-)
கோபத்தின் காரணம் அடுத்த பதிவில்.

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
புதுவருடத்துக்கு 4 நாள் விடுமுறை.எப்படி பொழுது போக்குவது என்று மண்டைக்குடைச்சல்.நல்ல இடம் சொல்லியிருக்கீங்க,இதுவரை போனதில்லை.
போய் பார்த்திடவேண்டியது தான்.