Friday, December 7, 2007

இளமையில் திருமணம்

சில நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் இந்த ரிப்போர்ட் இடம் பெற்றது.
பார்க்க முடியாதவர்கள்/தவறவிட்டவர்களுக்காக...

இப்படி நடப்பது நமது "தமிழகத்தில்".

இப்படி நடைபெற என்ன காரணம் என்று தெரியுமா? அவர்களே சொல்கிறார்கள்.ஆம்பளைங்க சரியான வேலைக்கு போய் பணம் கொண்டுவருவதில்லை.பஞ்சம்/வறுமை/கல்வியின்மை இப்படி பல இல்லாமை.

அவர்கள் சொல்வதை இங்கு எழுதுவதைக்காட்டிலும் நீங்களே படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

படிக்கனும் என்று ஆசைப்படும் குழந்தைகளுக்கு திருமணமாம்!!!



நன்றி: சன் தொலைக்காட்சி.

4 comments:

துளசி கோபால் said...

(-:

சௌ.பெருமாள் said...

கொடுமைதாங்க துளசி.
இதில் வரும் பெண்களை பாருங்கள்...!!

கோவி.கண்ணன் said...

குமார்,

எங்க அம்மாவுக்கு 13 வயதில் திருமணம் நடந்து 16 வயதில் குழந்தை பிறந்ததாம், அப்பாவுக்கு 16 வயதில் நடந்ததாம். அம்மாவுக்கு அக்காவுக்கும் 16 வயதுதான் வேறுபாடு.

அது அந்த காலத்தில், தற்பொழுது செட்டில் ஆகி திருமணம் பற்றி நினைப்பதற்கே 30+ ஆகிவிடுகிறது.

16 ஆண்டுக்கும் முன்பு நண்பரின் தங்கைக்கு அவர் அப்பா 16 வயதில் திருமணம் செய்து வைத்தார், இத்தனைக்கும் அவர் படித்தவர் தலைமை ஆசிரியராக இருந்தவர். நண்பனின் தங்கையின் மகள் +2 படிக்கிறாள்.

சில குடும்ப வழக்கமாக இன்றும் இளவயது திருமணம் நடைமுறையில் இருக்கிறது, காசுக்கு ஆசைப்பட்டு வயதானவர்களுக்கு இளம் வயது பெண்களை திருமணம் செய்து வைப்பதுதான் மிகக் கொடுமையானது.

சௌ.பெருமாள் said...

வாங்க கோவியாரே,என்ன இருந்தாலும் 13 வயதெல்லாம் கல்யாண வயதா? என்ன மன முதிர்ச்சி இருக்கும்?
அதுவும் இக்காலத்தில்?