குடும்பத்தை அழைத்து வர தேவையான வேலைகளை முடித்த பிறகு தங்குவதற்கான இடத்தை தேட ஆரம்பித்த பிறகு இதில் உள்ள நெளிவு சுளிவுகள் தெரியவந்தன.
சுமாராக ஒரு சிறிய குடும்பம் தங்குவதற்கு ஓறை வீடு போதுமானது ஆனால் அந்த மாதிரி வீடுகள் வாடகைக்கு கிடைக்காது ஏனென்றால் அவை “சேவா” வீடு என்று இங்குள்ள குறைந்த சம்பளம் உள்ளவர்களுக்காக வீடமைப்பு கழகத்தால் கொடுக்கப்படுவது.சரி,ஈரறை வீடுகளை பார்க்கலாம் என்றால் சம்பளத்தில் பாதியை வைக்கவேண்டி இருந்தது.பிழைக்க வந்துவிட்டு பாதியை வாடகைக்கே கொடுத்துவிட்டு மீதியை என்ன செய்வது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.அதோடு எந்த இடத்தில் வீடு பார்ப்பது என்ற குழப்பமும்.கூடிய வரை ஆரம்ப பள்ளி பக்கத்தில் இருக்குமாறு பார்க்கலாம் என்று நினைத்து வாடகை வீடு பார்க்கும் முகவரை அனுகினேன்.
என்னுடைய நிலமை மற்றும் என்னுடைய நிதிநிலமையை கருத்தில்கொண்டு அந்த முகவர் வேறொரு யோஜனையை முன் வைத்தார்.ஆதாவது ஒரு அறையை வாடகையை எடுத்துக்கொள்வது,அதில் கொஞ்ச நாள் தங்கிக்கொண்டு மேற்கொண்டு யோசிப்பது.
இந்த யோஜனை சரியாக வரும் என்று தோன்றியதால் அப்படியே பார்க்கும்படி சொன்னேன்.
அவர் பார்த்த இடங்களில் எல்லாம் குடும்பத்துக்கு வீடு கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் அதோடு நாங்கள் சமைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்தனர்.
இப்படியே நாட்கள் போய்கொண்டிருந்த போது ஒரு நாள் முகவர் அழைத்து ஓர் அறை மட்டும் வாடகைக்கு விடுகிறார்களாம் அவர்களும் இந்தியர்கள் தான்,பார்க்கலாமா? என்றார்.வேறு வழியில்லாத்தால் போய் பார்த்தேன்.
600 வெள்ளி வாடகை வேறு சாமான்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் மாதிரி இல்லை.நம் அவசரத்துக்கு ஏதாவது கிடைத்தால் போதும் என்று ஒப்புக்கொண்டு தங்க ஆரம்பித்தேன்.மனைவி மக்களும் வந்த பிறகு அந்த ஒரு அறை போதவில்லை அதுவும் இல்லாமல் அந்த வீட்டு ஓனர் தொல்லைகளும் அதிகமாக ஆரம்பித்தது.
சமைத்து நாங்கள் சாப்பிடவைத்திருக்கும் பொருட்கள் காணாமல் போக ஆரம்பித்தது அன்புத்தொல்லையாக எங்களையே சமைக்கச்சொல்லி கேட்க ஆரம்பித்தார்கள்.அதோடிலில்லாமல் அவர்கள் பையன் பிரச்சனை என்று வீட்டின் உள் வேறு பிரச்சனைகளும் எழ ஆரம்பித்தது.
அந்த சம்யத்தில் பையனின் பள்ளிக்கூடம் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்து ஒரு பள்ளியில் போய் விஜாரித்தோம்.அதன் முதல்வர் விபரங்கள் கேட்டு நுழைவு தேர்வு எழுதச்சொல்லி அப்போதே தேர்வும் வைத்துவிட்டார்.அதன் முடிவுகளை அப்போதே பார்த்துவிட்டு உங்கள் மகனை Primary ஒன்றிலிருந்து வரச்சொல்லுங்கள்,அப்போது தான் அவன் அடிப்படை நன்றாக இருக்கும் என்றார்.மகனின் படிப்பில் சுமார் 1.5 வருடங்கள் துண்டு விழுவது கண்டு அதிர்ந்தேன்.சரி மற்றொரு பள்ளியில் முயற்சிக்கலாம் என்று வேறொரு பள்ளிக்கு போன போது அங்குள்ள முதல்வர்,முதலில் நீங்கள் போன பள்ளி சொன்னது தான்,வேறு வழியில்லை என்றார்.அப்போது தான் சிங்கையில் உள்ள Network புரிந்தது.
முதல் பள்ளி தேர்வு வைத்தவுடனே அதை அவர்கள் துறைக்கு அனுப்பிவிட்டார்கள் போலும்,அதனால் எங்கு போனாலும் இதே பதில் தான் கிடைக்கும் என்பது தெரிந்து போனது.
வேறு வழியில்லாமல் பையனை முதல் வகுப்பில் சேர்த்தேன்.1.5 வருடங்கள் அனாமத்தாக போனது.
Wednesday, March 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஆமாங்க. இங்க கூட இப்படித்தான் நெட்வொர்க். எல்லாம் ஒண்ணோட பின்னிப் பிணைஞ்சு இருக்கு. ஆனாலும் இப்படி ஸ்கூல் மிஸ் ஆகறது பாவம்தான்.
அடடா, இவ்ளோ பிரச்சினையா! ம்ம்ம் சுவாரசியம் தட்டுது கதையிலே.
கான்கிரீட் னு பேர் வெச்சாலும் மனிதர்கள் -டிராமா.....
ம்ம்ம் தொடருங்க.
இ.கொத்தனார்
இந்த அடி போதாது என்று வேறு ஒன்றும் விழுந்தது... பல வருடங்களுக்கு பிறகு.அது வரும் பின்னால்.
திவா
புது இடம்,வழி காட்ட இப்போது இருப்பது மாதிரி இணைய தகவல்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காததது என்று கொஞ்சம் போட்டுப்பார்த்துவிட்டது.இதிலும் நன்மை தான்... என்ன? எல்லா இடங்களுக்கும் மனைவி தான் அலைந்தார்கள்.
கட்டுப்பெட்டித்தனம் கொஞ்சம் விட்டுப்போனது.
சீர்காழி பெண் சிங்கையில் என்று எப்பாவது ஒரு பதிவு வந்தால், அவர்களிடம் இருந்து மேலும் சுவாரஸ்யமான விஷயங்கள் வரலாம். :-)
நம்மூருக்கு வந்திருந்தால் பையனை ஒரு வகுப்புக் கூடுதலாச் சேர்த்துருக்கலாம்:-)
நம்மூர் ஹை ஸ்டாண்டர்ட் இங்கே தாமதமாத்தான் வரும்.
6 வருசம் ப்ரைமரி முடியும்வரை விளையாட்டோ விளையாட்டுதான்.
நமக்கு (இந்தியப் பெற்றோருக்கு) பயம் வந்து வயித்தைப் பிரட்டும். என்னடா இது பசங்க ஒண்ணும் படிக்கிற வழியைக் காணோமேன்னு.
வாங்க துளசி
உங்க ஊருக்கு வந்திருக்கலாம் அதற்கு நான் இன்னும் படிக்கவேண்டியிருக்கும்.
என்னது! 6வது வரை விளையாட்டுக்கு முக்கியத்துவமா!!?
6 வது வரை மட்டுமாவா? அதுக்கப்புறமும் இதே கதிதான்.
நாடே ஸ்போர்ட்ஸ்க்குப் பின்னாலேதான் ஓடுது.
டிவியில் ஒரு மணி நேர செய்தியில் கிட்டத்தட்ட 40 நிமிஷம் ஸ்போர்ட்ஸ் நியூஸ்தான்னா எங்கே போய் முட்டிக்கிறது?
சில புள்ளைங்க மட்டும் நல்லாவே படிச்சுரும். அதுகளுக்கு மத்த பசங்க மத்தியில் nerd ன்னு பேர்(-:
nerd!!?? அது சரி தான்.
நம்மூர் பிள்ளைகள் மட்டும் கேள்விப்பட்டால் அவ்வளவு தான் அப்பா & அம்மாவுக்கு தெரியாமல் விசா எடுத்து வந்து குமிஞ்சிடுவாங்க.
Post a Comment