Wednesday, March 12, 2008

நிரந்தரவாசி

சேர்ந்த 2 மாதங்களுக்குள் வேலை அனுமதிசீட்டு கிடைத்தது அதன் பிறகு அடுத்த நிலையான நிரந்தரவாச தகுதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு வேலை செய்யும் நிருவனத்தின் உதவி கட்டாயம் தேவைப்படும்,அவசியமில்லாவிட்டாலும்.என்னுடைய ஒப்பந்த விதிகளின்படி ஓராண்டு கழித்து தான் விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஒரு வருடம் காத்திருந்தேன்.

இதற்கிடையில் பழைய கம்பெனியில் இருந்து, வருகிறாயா? இல்லை உன்னை வேலை நீக்கம் செய்யவா? என்று கடிதம் வந்தவுடன் தகப்பானரிடம் சொல்லி என்னுடைய Resignation கடிதத்தை அனுப்பினேன்.அப்படி இப்படி என்று 13 வருட இந்திய கட்டுமானத்துறை வாழக்கை முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் இருந்தவரை ஒரு லட்சம் ரூபாய் என்பது அடையமுடிய (13 வருடங்களுக்கு முன்பு) சங்கதியாக இருந்தும் இங்கு வந்து 4 மாதம் முடிந்தவுடன், ஏன் பலரும் வெளிநாடு நோக்கி ஓடுகிறார்கள் என்று புரிந்தது.புரிந்துகொண்டும் இருக்கிறது.

இந்த நிருவனத்தில் ஒரு வருடம் முடிந்தவுடன் நிரந்தரவாச தகுதிக்கு விண்ணப்பித்தேன்,அதற்கு முன்னால் என்னென்ன விபரங்கள் அளித்தால் விரைவாக பெறமுடியும் என்று பல அனுபவஸ்தர்கள் உபாயம் கொடுத்தார்கள்.

தெரிந்தவர்கள் பட்டியலில் உள்ளூர்வாசிகள் இருந்தால் நலம் என்பதால் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவரது பெயரை போடலாம் என்று நினைத்து அவரை அழைத்தேன்.விபரத்தை சொன்னவுடன்,சந்தோஷமாக ஒப்புக்கொண்டு அவருடைய விபரங்கள் கொடுத்து உதவினார்.அவர் போலிஸில் வேலை செய்து நல்ல பெயர் எடுத்திருந்ததால் என்னுடைய விண்ணப்பம் ஓரளவு எடுபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த கால கட்டத்தில் பலருக்கும் விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதத்திலிருந்து 1 வருடம் கழித்து தான் நிரந்தரவாசத் தகுதி கிடைத்தது.அந்த எண்ணத்தில் விண்ணப்பித்த பிறகு அதை மறந்துவிட்டேன்.அதோடில்லாமல் என்னுடைய முகவரியை எனது சொந்தக்காரர் வீட்டின் முகவரியில் கொடுத்திருந்தேன்.எப்போதும் மாதம் ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு தொலைபேசுவேன்,ஒன்றும் சிறப்பு விஷயம் இல்லாததால் 3 மாதங்களாக அவர்களுக்கு தொலைபேசவில்லை.ஒரு நாள் ஞாபகம் வந்து அவர்களுக்கு தொலைபேசிய போது தான் என்னுடைய நிரந்தரவாச தகுதியை அங்கீகரித்திருப்பதாகவும் வந்து பெற்றுக்கொள்ள வேண்டிய தேதியையும் கொடுத்திருந்ததாக சொன்னார்கள்.மிகவும் சந்தோஷமாக இருந்தது.நிரந்தரவாச தகுதி இருப்பதில் பல அனுகூலங்கள் உண்டு, இன்றும்.அவற்றில் சில..
1.வீடு வாங்க முடியும்
2.CPF உண்டு
3.குழந்தைகள் படிப்புக்கு செலவு குறைந்த பள்ளி கட்டணம்.
4.மருத்துவ செலவில் கழிவு உண்டு.
5.மிக முக்கியமாக உங்களை வேலைக்கு எடுக்க தயங்கமாட்டார்கள்.வேலை தான் கிடைக்கனும்.

அனுகூலம் மட்டும் தானா? என்றால்.. அது அவரவரின் தனிப்பட்ட பார்வையை பொருத்தது.

சரி, நிரந்தரவாச தகுதி கிடைத்தவுடன் மனைவி/மக்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது தான் பையன் இந்தியாவில் 2 வது வகுப்புக்கு போய் 3 மாதங்கள் ஆனது, இங்கு வந்தால் எந்த வகுப்பில் சேர்ப்பார்களோ என்ற குழப்பம் வேறு.

அது அடுத்த பதிவில்.

5 comments:

துளசி கோபால் said...

நிரந்தரவாசி ஆனதுக்கு வாழ்த்து(க்)கள். கொஞ்சம் லேட்டாச் சொல்றேனோ? :-))))))


அந்த ஒரு லட்ச ரூபாய் 26 வருசத்துக்கு முன்னாலே கனவில் மட்டுமே வந்து போச்சுன்னு சொல்லலாமுன்னா......

கனவுகூட ஏழாயிரத்துக்கு மேலே வரலை:-)

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
ஆமாம்,லேட்டான வாழ்த்துக்கள் தான்,அதனால் என்ன? இப்ப நன்றி சொல்லிட்டா போச்சு. :-)
இது நடந்தது 1995 யில்.
அதென்ன ஏழாயிரம்? ஏதாவது வேண்டுதலா? :-)கனவு எண்ணிக்கையா?

துளசி கோபால் said...

அப்ப இவர் சம்பளம் அஞ்சாயிரம்.

ஏழாயிரம் கிடைச்சா இன்னும் கொஞ்சம் நல்ல வீட்டுக்குக் குடிபோகலாமே என்ற நப்பாசைதான்.

அதுக்குமேலே ஆசைப்படக்கூடத் தெரியாம வெள்ளந்தியா இருந்துருக்கேன் அப்ப:-))))

சௌ.பெருமாள் said...

அப்படி போடுங்க.
நான் வேலைக்கு சேர்ந்த போது சம்பளம் 16.25 ரூபாய் ஒரு நாளைக்கு. :-(

திவாண்ணா said...

ம்ம்ம்
நான் காலேஜ் சேந்தப்ப மெஸ்பில் மாசம் 80 ரூபாய். அதிகமாயிடுச்சு எல்லரும் போர் கொடி தூக்கினாங்க!
அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க!