கடல் கடந்த நாடுகளில் தமிழை பிரபலப்படுத்த பல முயற்சிகளை சில நாடுகள் எடுத்து வந்தாலும் அதில் சிங்கப்பூரின் பாணியே தனி தான்.அவர்கள் இலக்கு எல்லாம் குழந்தைகள் தான்.
குழந்தைகளை தமிழில் பேச வைத்துவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்ட சந்தோஷம் கிடைக்கும்,அதற்குப்பிறகு வீட்டிலும் பேச வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு வந்துவிடும்.தமிழை ஓரளவு கட்டிக் காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணத்துடம் சிஙக்ப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சி தான் கீழே உள்ளது.
பார்த்து மகிழுங்கள்.
வழக்கம் போல்,நன்றி: வசந்தம் சென்ரலுக்கு.
Sunday, January 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமைங்க. சரியான இடத்தைப் புடிச்சிட்டாங்க. இளைய சமூகம் அருமையாத் தமிழ் பேசுது.
நம்மாளுவேற நைஸா பழங்களை வாங்கி வாயில் போட்டுக்கிட்டு இருக்கார்:-)
மிகவும் மனநிறைவா இருக்கு.
வாங்க துளசி
இதைவிட அருமையான வீடியோ பிடிபடாமல் போய்விட்டது.
எப்போதும் வானிலை அறிக்கை சொல்லும் போது ரிக்கார்டரை மூடிவிடுவேன்.அன்றும் அப்படி மூடிவிட்டு பார்த்தால் கடைசியில், அங்கு தாய் குரங்கும் & குட்டியும் போட்ட ஒரு ஆட்டம் இருக்கே... பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
என்றாவது மாட்டாமலா போகும்?
பள்ளிகளில் தமிழை மேம்படுத்த இது போல பல நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.ஆனா மக்களோ பேசுவேனா? என்கிறார்கள்.
மகிழ்ச்சி. ஆனால், எல்லா சிங்கப்பூர் தமிழ் குழந்தைகளும் இறுக்கமான உரைநடைத் தமிழிலேயே பேசுவது ஒரு குறையாக இருக்கிறது. ஒலி, ஒளி ஊடகங்களின் தமிழ் ஒரு காரணம். வீட்டில் பேச்சுப் பயிற்சி இல்லாததும் ஒரு காரணம். ஆனால், வீட்டில் தமிழ் பேசுவதை பெற்றோர்கள் தான் ஊக்குவிக்க வேண்டும்.
ஆமாங்க ரவிசங்கர்
சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்கள் கூட இப்படித்தான் பேசிகிறார்கள்.
எங்கே தவறாக பேசிவிடுமோ என்ற தயக்கம் கூட காரணமாக இருக்கலாம்.
//எங்கே தவறாக பேசிவிடுமோ என்ற தயக்கம் கூட காரணமாக இருக்கலாம்.//
ஆமா, இது முக்கியமான உளவியல் காரணம். தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை பிசகாமல் பேச முயல்வதுடன் ஒப்பிடலாம். இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் மொழி சமூகத்தில் மதிப்பும் பெற்றிருக்கும்போது இப்படி பேச முனைகிறோமோ? முதல் மொழியும் தாய் மொழியும் என்றால் தயக்கமின்றி சின்னச் சின்ன பிழைகள், உள்ளூர் வழக்குகளோடு பின்னிப் பிணைந்து பேச இயல்கிறது.
எனக்கு இன்னொரு சந்தேகம் என்னவென்றால், ஒரு வேளை இவர்கள் சிங்கையில் இரண்டாம் தலைமுறையாக தங்கியிருக்கும் பெற்றோரின் பிள்ளைகளோ? தமிழ்நாட்டில் இருந்து குடியேறி முதல் தலைமுறையாக அங்கு வாழும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் வீட்டில் கூடிய தமிழ் பயன்பாடு இருப்பதால் தமிழ் இயல்பாக வரும் என்று நி்னைக்கிறேன். சிங்கையில் இருந்த போது அத்தகைய தமிழ் குடும்பங்களோடு பழகி இருக்கிறேன். நன்றி
ரவிசங்கர்
உங்கள் அனுமானம் சரி.
முதல் தலைமுறை தமிழ் பேச்சு ஓரளவு சரியாக இருக்கும்,இருந்தும் பல ஆங்கில சொற்கள் வந்து விழும்.
வீட்டில் ஓரளவு தமிழ் பேச்சு இருந்தால் இவர்களும் பேச கூச்சப்படமாட்டார்கள்.
தமிழ் படம்/நாடகம் பார்ப்பார்கள்,தமிழ் பாட்டு கேட்பார்கள் ஆனால் பேசனும் என்றால் அப்படியே ஒடுங்கிவிடுவார்கள்.
அம்மா என்பதைவிட மம்மி என்று சொல்வது அவர்களுக்கு இலகுவாக இருக்கு.பெரியவர்களையும் சேர்த்து தான்.
Post a Comment