Sunday, June 1, 2008

Lau Pa Sat



மேலே உள்ள படம் தான் லாவ் ப சாட் என்கிற இடம்.இதனுள் பல உணவு அங்காடிகள் உள்ளது.இதன் முந்தைய வரலாறு சிங்கப்பூருடன் தொடர்புடையதால் வெளி அமைப்பை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள்.இந்த பகுதி மத்திய வட்டார இடத்தில் உள்ளதால் பல நாட்டுக்காரர்களும் உபயோகப்படுத்தும் விதமாக விதம் விதமான சாப்பாடுகள் கிடைக்கும்.விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

வரலாற்றுப் பின்னனியில் இருக்கும் இக்கட்டிடம் என்னுடைய வாழ்விலும் வரலாறு படித்தது அதை பிறகு சொல்கிறேன்.

நாங்கள் கட்ட இருந்த கட்டிடம் Exchange Centre என்று இப்போது அழைக்கப்படுகிற கட்டிடம் ஆகும்.எங்கள் வேலை 3வது மாடியில் இருந்து ஆரம்பிக்கும் என்பதால் கட்டிடம் தரையில் இருந்து எழும்பிய பிறகே போனோம்.Capital Tower யில் செய்த பணி போலவே இதுவும் அதனால் வேலை வித்தியாசம் அவ்வளவாக இல்லை.என்ன! இப்போது குத்தகைகாரர் மாதிரி வேலை பார்க்கனும் என்பதால் ஆட்களை வேலை வாங்குவதும் சில ரக இயந்திரங்களை ஓட்டவும் கற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.ஒவ்வொரு நாள் தேவைக்கும் வேண்டிய சகலமானவற்றையும் பார்த்துக்கொள்வதும் நம் கையில் விழுந்தது.எல்லா நாட்களும் வேலை இருக்காது என்பதால் சில நாட்கள் சாப்பிட மட்டுமே வேலைக்கு வருவது போல் தோன்றியது.
சில நாட்களுக்கு காலை அலுவலகம் வந்த 20 நிமிடத்திலேயே கண்ணை கட்ட ஆரம்பித்துவிடும்.குளிர்சாதனம் பிரச்சனையும் இதில் உதவியது.அப்போதே முடிவு செய்தேன் இந்த நிறுவனத்தை விட்டு விட வேண்டும் என்று.அதோடு அப்போது அந்நிறுவனத்திலும் உள் பிரச்சனைகள் கட்டுக்கு அடங்காமல் போய்கொண்டிருந்தது என்று காற்று வாக்கில் வரத்தொடங்கியது.

சிங்கையில் வேலை நிலவரம் மேம்படும் வரை காத்திருப்போம் என்று காத்திருந்தேன்,அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறி கட்டுமானத்துறையில் தெரியவில்லை.



இரண்டு பிலாக்குகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் எங்கள் வேலை,அதோடில்லாமல் மேலே சரிவாக இருக்கும் பகுதியும் ஸ்டீலால் ஆனதும் எங்கள் வேலை.இதில் வலது பக்கம் இருக்கும் கூரையில் வேலை ஆரம்பிக்கும் வரை தான் நான் இங்கு இருந்தேன்.

மேலும் சில படங்கள் கீழே...





இப்படி அப்படி என்று 8 மாதங்கள் ஓடி ஒரு நேர்காணலுக்கும் அழைப்பு வரவில்லை.வரும் விளம்பரங்களில் பலவற்றில் உள்ளூர்காரர் வேண்டும் என்றோ அல்லது இரு மொழி (சீனம் & ஆங்கிலம்) பேசும் ஆட்கள் மட்டுமே தேவை என்று வந்துகொண்டிருந்தது.சனிக்கிழமை வரும் செய்திதாளில் வரும் விளம்பரங்கள் குறைந்து சில பக்கங்களே வந்தது.அதை வைத்தே சிங்கையில் வேலை நிலவரம் எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். :-)

இப்படி போய்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் பக்கத்தில் உள்ள லா ப சாட்டில் சாப்பிட போனேன்.உணவு ஆர்டர் செய்யும் போது பையில் கையைவிட்டா....! என்னுடைய அடையாள அட்டையுடன் வங்கி அட்டை இருக்கும் சின்ன பை காணாமல் போயிருந்தது. ஷாக் அடித்தது போல் இருந்தது.எங்கு தொலைத்தேன் என்று தெரியவில்லை.அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தேனா? அல்லது இங்கு பிக்பாக்கெட்டிடம் இழந்தேனா? என்று தெரியாத குழப்பத்தில்,முதலில் செய்தது வங்கி அட்டையை முடங்கச்செய்ய தொலைபேசியது தான்.

பல இடங்களிலும் கிடைக்காததால் அன்று சாயங்காலம் காவல்துறை போஸ்ட்க்கு சென்று ரிப்போர்ட் செய்தேன்.அவர்களோ இன்னும் ஒரு வாரம் வரை காத்திருக்கச்சொன்னார்.யாராவது எடுத்திருந்தால் ரிப்போர்ட் செய்ய அவசியம் இல்லாமல் போகக்கூடும் என்பதால்.ஒரு வாரம் வரை எந்த விதமான விபரமும் கிடைக்காததால் திரும்ப அவர்களிடம் போய் ஒரு ரிப்போர்ட் வாங்கி வந்தேன்,அதை வைத்து தான் வேறு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அதற்கு வேறு தெண்டம் அழனும்.

இன்னும் வரும்...

4 comments:

திவாண்ணா said...

கட்டிடங்க அழகாவே இருக்கு. இங்கே ஏதேனும்தொலைஞ்சதுன்னா ரிபோர்ட் பதிவு பண்ணி கிடைக்கலைன்னு சான்றிதழ் வாங்க காவல் துறைக்கும் சேத்து இல்லே அழணும்?

துளசி கோபால் said...

அடடா....... பர்ஸ் கிடைச்சதா?

கடுமையான தண்டனைகள் இருக்கும் நாட்டில்கூட இப்படிப் பிக்பாக்கெட்டுகள் இருக்கே!!!!


இப்போ எனக்கொரு கொசுவத்தி ஏற்றிவச்சுட்டீங்க.:-)

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
இதுக்கு பேரு தான் கொசுவத்தியா??
பர்ஸ்ஸெல்லாம் கிடைக்கவில்லை,அனா அதுக்காக எபெக்ஸ்ட் போன வருடம் வரை இருந்தது. :-(

சௌ.பெருமாள் said...

வாங்க திவா

இங்கு அந்த பிரச்சனையெல்லாம் கிடையாது அவர்களிடம் சான்றிதழ் வாங்கவில்லை என்றால் அடுத்த ID கிடைக்காது.