Sunday, May 25, 2008

மீண்டும் Recession

இந்த கேப்பிடல் டவரில் வேலை ஆரம்பித்த ஒரு வருட காலத்துக்குள் என் வரையரையில் இருந்த வேலை முடிந்து சின்னச்சின்ன வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.அங்கிருந்த பல கொரியர்களின் வேலையும் முடியும் சமயத்தில் இருந்தது அதே சமயத்தில் வேறு புதிய வேலையும் இவர்களுக்கு கிடைக்கவில்லை...கத்தியை கையில் எடுக்க ஆரம்பித்தார்கள்.

சமீபத்தில் சேந்தவர்கள்,வெளிநாட்டவர்கள்,நிரந்தரவாசிகள் கடைசியாக உள்ளூர்காரர்கள் என்று வகை வகையாக “கொத்து பரோட்டா” போட்டார்கள். அதில் என் பெயரும் வந்து வயிற்றில் புளியை கரைத்தது.இந்த கால கட்டத்தில் சிங்கையில் கட்டுமானம் அடி மட்டத்தை தொட்டு அதற்கும் கீழே போகமுடியுமா? என்று பார்த்துக்கொண்டு இருந்தது.

இந்த நிலையில் அரசாங்கம் தன்னிடம் உள்ள MRT என்று சொல்லப்படுகிற ரயில் சேவையை விரிவுபடுத்த எண்ணி அதற்கான கட்டுமான குத்தைகளை விடுவிக்க ஆரம்பித்தது.இது ஓரளவுக்கு சூட்டை தணிக்க உதவினாலும் பலர் வேலையில்லாமல் திண்டாடினோம்.

இந்த கம்பெனி ஆரஞ்சு கடிதாசி கொடுத்து ஒரு மாத நோட்டிசு நேரத்தில் பல வேலைகளுக்கு எழுதி போட்டேன்,அதனால் எந்த பயனும் இல்லாமல் இருந்தது இன்னும் கலக்கத்தை உண்டுபண்ணியது.இந்த ஒரு மாதம் முடியும் நேரம் வந்தது அந்த நேரத்தில் இந்த கொரியன் கம்பெனியில் இருந்த குத்தகைகாரருக்கு ஆட்கள் தேவைப்பட்டது.

என்னடா! இது நாம் வேலை வாங்கிய நிறுவனத்திலேயே போய் வேலை செய்வதா என்ற தயக்கம்.அந்த நேரத்தில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் பட்சத்தில் இப்படி வேலை கொடுக்கிறேன் என்று சொல்லும் நிறுவனத்தில் இருந்துகொண்டு மேற்கொண்டு முயலலாம் என்ற எண்ணத்துடன் அந்த ஸ்டீல் கம்பெனியில் சேர்ந்தேன்.சம்பளமும் குறைவு தான் ஆனால் வேறு வழியில்லை.

இந்த புது கம்பெனி நேர்காணலே புதுவிதமாக இருந்தது.என்னைப்பற்றி அனைத்து தகவலும் அங்கு இருந்த மனவாடுக்கு சொல்லப்பட்டிருந்தது.அவர் தான் தரக்கட்டுப்பாட்டுக்கு தல அவருடைய அணியின் கீழ் தான் நான் வந்தேன்.நேர்காணலுக்கு போய் உட்கார்ந்த உடனே அங்கிருந்த மக்கள் வளத்துறை சம்பிரதாய கேள்விகளை கேட்டு பதில் வாங்கிக்கொண்டு நிபுணத்துவ கேள்விகளுக்காக அந்த பெண்மனி நம் மனவாடை பார்க்க...
எனக்கு இவரைப்பற்றி தெரியும் அதனால் கேள்வி எதுவும் இல்லை என்று சொல்லி முடித்துவிட்டார்.மனித வள அதிகாரி முழித்தது இன்னும் கண்ணில் நிற்கிறது.

இவர்கள் வேலை Lau Pau Sat என்ற பிரபல உணவங்காடிக்கு பக்கத்தில் இருந்தது.இதில் உள்ள சில இரும்பு வேலைகள் இவர்களிடம் வந்தது.

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

3 comments:

திவாண்ணா said...

ஆரஞ்சு கடிதாசு? termination order ஆ? சிங்கை வாழ்க்கை ஒண்ணும் மலர் படுக்கை இல்லை போல இருக்கு!

சௌ.பெருமாள் said...

ஆமாங்க திவா,போன வருடம் வரை இதே நிலை தான் பலருக்கு.
இப்ப ஆளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். :-))

இலவசக்கொத்தனார் said...

http://specials.rediff.com/money/2008/may/29bridge1.htm

உங்க சம்பந்தப்பட்ட மேட்டராச்சேன்னு இங்க சுட்டி குடுத்தேன். எஞ்சாய்.