சில சமயங்களில் சிற்பங்கள் நம்மை அப்படியே கட்டிப்போட வைத்து சிற்பின் காலத்துக்கு இழுத்துப்போகும்.எவ்வளவு நுணுக்கம்,அங்கங்களின் அளவு & வளைவு என்று நம்மை சில நிமிடங்களாவது அந்த இடத்தில் நிற்க வைத்துவிடும்.
அந்த வரிசையில் நான் பார்த்த சில பொட்டானிகள் கார்டனில் உள்ள சிலைகள் கீழே.பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.
கீழே உள்ள இந்த மிதிவண்டி பெண்- என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.நேர்த்தியான வார்ப்பு.
இப்படி எல்லாவற்றையும் எடுத்து முடித்து இஞ்சி தோட்டம் மற்றும் ஆர்கிட் தோட்டத்துக்கு போகும் முன் ஒரு நல்ல காட்சியை எடுக்கலாம் என்று கிளிக்கினால்.. "Disk Error" என்று வாய் பிளந்துவிட்டது கேமிரா.
எனக்கு தெரிந்த அவ்வளவும் செய்து பார்த்தும் ஹூகும்,மசியவில்லை.
இந்த அளவுக்காவது படங்கள் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.
Tuesday, January 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பின்னூட்டம் போட முடியுதா? என்று செக்கிங்.
இப்படித்தான் சிலசமயம் காலை வாரிவிடும்.
மெமெரி கார்ட் ஃபுல் என்று எனக்கு அறிவிப்பு வரும். அதனால் இப்போதெல்லாம் கேமெராப் பையிலேயே ஒரு எக்ஸ்ட்ரா மெ.கா.. வைத்திருக்கிறேன்.
இது தான் முதல் தடவை இப்படி காலை வாருவது. என்ன இப்ப? அடுத்து சீன பெருநாள் வருகிறது,விட்டதை அப்ப பிடிச்சிடலாம்.
Post a Comment