Wednesday, June 6, 2007

தெப்பம்

போன பதிவில் Coffer Dam க்கு தேவையான சாமான்களையும் அதை செய்யும் விதத்தையும் சொல்லியிருந்தேன்.
இந்த தெப்பத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செலவில்லாமல் எப்படி செய்தார்கள் என்று பார்ப்போதும்,அதுவும் இயற்கையோடு ஒத்திசைந்து.

கடலுக்கு பக்கத்தில் இருக்கும் நதிகளில் தண்ணீர் மட்டம் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்.நாங்கள் வேலை செய்த சுங்கை சரவாக்கும் அந்த மாதிரியான நதிதான்.வேலை அதிகமாக இல்லாத நேரங்களில் நதியை கவனித்துக்கொண்டிருந்த நாட்களில் ஒரு சமயத்தில் மட்டும் தண்ணீர் அசைவின்றி ஏரியில் இருப்பது போன்று இருக்கும். ஆதாவது நீர் ஓட்டம் மாறும் நேரத்தில்.


எங்கள் குத்தைகைகாரர் இந்த சமயத்தை தான் உபயோகப்படுத்திக்கொண்டார்.
எப்படி?
தண்ணீர் ஓட்டம் மாற இருக்கும் 30 நிமிடங்களுக்கு முன்பே எங்களிடம் உள்ள சின்ன படகு மூலம் ஒரு தடிமனான கயிறை எங்கு போகவேண்டுமோ அங்கு ஒரு இடத்தில் கட்டிவிடுவார்கள்.தெப்பத்தின் மேல் உள்ள பாரம் தூக்கி மூலம் அந்த கயறை லேசாக இழுத்தால் போதும் தெப்பம் தன்னால் அந்த பக்கம் நகர ஆரம்பிக்கும்.டக் போட் தேவையில்லாமல்.சரியான திசையில் போகவில்லை என்றால் எங்கள் படகு மூலம் கொஞ்சம் தள்ளிக்கொடுப்போம்.

என்ன? சின்ன படகு மூலம் பெரிய தெப்பத்தை தள்ளுவதா?காதில் பூ வைக்காதே என்கிறீர்களா?

நானும் முதலில் அப்படி நினைத்தேன்.பிறகு தான் தெரிந்தது,தண்ணீரில் இருக்கும் எவ்வளவு பெரிய பொருளையும் சின்ன உந்துதல் மூலம் நகர்த்த முடியும் என்பது. இது தான் தண்ணீரில் வேலை பார்பவர்களுக்கு தெரியவேண்டிய அரிச்சுவடி.

எங்கள் நதி அவ்வளவு பெரிதாக இல்லாததால் இதனை சுலபமாக சமாளிக்க முடிந்தது.பெரிதாக இருந்ததால் டக் போட் மிக அவசியம்.பாதுகாப்பு காரணங்களுக்கு.

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு நாள் இந்த தெப்பத்தையும் ஆற்றின் நீர் ஓட்டம் அடித்துகொண்டு போன கதையை பிறகு சொல்கிறேன்.

3 comments:

வைசா said...

// நானும் முதலில் அப்படி நினைத்தேன்.பிறகு தான் தெரிந்தது,தண்ணீரில் இருக்கும் எவ்வளவு பெரிய பொருளையும் சின்ன உந்துதல் மூலம் நகர்த்த முடியும் என்பது. இது தான் தண்ணீரில் வேலை பார்பவர்களுக்கு தெரியவேண்டிய அரிச்சுவடி. //

நியூட்டனின் இரண்டாவது விதி!

நன்றாக இருக்கிறது தொடர், குமார்.

வைசா

சௌ.பெருமாள் said...

முதல் முறை செய்யும் போது நான் அந்த தெப்பத்தின் மேல் இருந்தேன்,என்னுடைய மேல் அதிகாரி அவ்வாறு செய்யச்சொன்ன போது சிரித்தேன்.
பிறகு தான் தெரிந்தது,நான் தான் முட்டாள் என்று.:-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வைசா.
என்ன? உங்கள் பதிவுகளை தமிழ் மணத்தில் பார்க்கமுடியவில்லையே!!

வைசா said...

// என்ன? உங்கள் பதிவுகளை தமிழ் மணத்தில் பார்க்கமுடியவில்லையே!! //

வேலைப் பளு. பதிவுகள் போட நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கின்றபோது நான் போட நினைத்திருக்கும் விடயங்களில் பதிவுகள் போடுவேன்.

வைசா