Sunday, January 30, 2011

சின்ன வயசு ஆசை!

பள்ளியில் படிக்கும் காலங்களில் கோடைவிடுமுறை என்றால் கும்பகோணம் அருகில் இருக்கும் ஆடிப்பிலியூர் போவது என்பது கொஞ்ச வருடங்களுக்கு தொடர்ந்தது.இங்கு இருக்கும் பெரியப்பாவுக்கு நிறைய நிலம் மற்றும் தோட்டங்கள் இருந்தது அதனால் காலையில் எழுந்து சிறிய வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அப்படியே நிலபுலம் பக்கம் போனால் சாயங்காலம் தான் திரும்பி வருவேன்.வயலுக்கு போகும் போது செருப்பு போடக்கூடாது என்பதால் வெறும் காலுடன் பல கிலோமீட்டர் நடந்தே போய் வருவேன். எவ்வளவு தான் முள் குத்தினாலும் பிடிங்கிப்போட்டுவிட்டு ஜாலியாக கரும்பு வயலுக்குள் போய் வருவேன்.எவ்வளவு கரும்பு அப்படியே கடிச்சி சாப்பிட்டேன் என்ற கண்க்கே இல்லை.
வேலை/வெளிநாடு என்றாகிவிட்ட பிறகு பொங்கல் தவிர இந்த கரும்பை கடிச்சி சாப்பிட வாய்பே வாய்க்கவில்லை.சிங்கையில் இருக்கும் போது கரும்பு கிடைத்தாலும் ஓர் ஆளுக்காக வாங்கி சாப்பிட அலுப்பிலேயே சாப்பிடாமல் இருந்தேன்.
வெளிநாட்டு வேலையெல்லாம் முடிந்து உள்ளூரிலேயே வேலை வாய்த்த பிறகு முதல் பொங்கல் சமீபத்தில் வந்தது கரும்பு ஆசையை கிளப்பிவிட்டது.மனைவிக்கு என்ன்னுடய விருப்பம் தெரியும் என்பதால் 2 கரும்பாக வாங்கிவைத்துவிட்டார்.எனக்கு கரும்பை கத்தியால் சிறிது சிறிதாக நறுக்கி சாப்பிடுவது பிடிக்காது, பின்ன எப்படி?




கரும்பு துண்டு பெரிதாக இருக்கனும்.

4 comments:

துளசி கோபால் said...

சூப்பரு!!!!!!!!!!!!!!

எங்க ஆசையை எல்லாம் மூட்டை கட்டியாச்சு.

பற்கள் இருக்கும் நிலையில் டெண்டிஸ்ட்டுக்கு நிதி'தியாகம்' செய்ய மனம் இல்லை:-)))))

திவாண்ணா said...

என்ன பற்பசை உபயோகிக்கிறீர்கள்? :-)))

சௌ.பெருமாள் said...

இது இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு என்று தெரியவில்லை, ”ஆடும்” வரை அடிச்சி ஆடிட வேண்டியது தான்.

சௌ.பெருமாள் said...

திவா, இப்போது இருக்கும் பற்பசையில் தெம்பு வருமா? ஒருவேளை விளையாட்டாக கடித்துதுப்பிய வேலங்குச்சிகளின் பலனோ என்னவோ!!
இப்போது வரும் கரும்புகளில் அவ்வளவு சாரு இருப்பதில்லை- அதை எழுத மறந்துவிட்டேன்.