Sunday, July 29, 2012

I am ashamed...

மதியம் சாப்பாட்டு நேரத்தையும் கடந்த மீட்டிங் ஒருவழியாக முடிந்த போது மணி இரண்டு,அதற்கு பிறகு சாப்பிட்டுவிட்டு சகதொழிலாளியோடு பேசிக்கொண்டிருந்த போது “டப்” என்ற சத்தம்.கேட்ட மாத்திடத்திலேயே இது சாதரண மான சத்தம் அல்ல என்பது புரிந்தது.அலுவலக பக்கத்தில் ஒரு பெரிய கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருப்பதால் அங்கிருந்து வந்திருக்குமோ என்ற யோஜனையின் போது இது வேறு திசையில் இருந்து வந்தது என்றார் என் நண்பர்.வெளியில் வந்து என்ன என்று விஜாரிக்கலாம் என்று பார்த்த போது வேலையின் இடத்தின் அதிகாரி ஓடி வந்து பாதுகாப்பு தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு “பியர் விழுந்துவிட்டது” என்று சொல்லி அவ்விடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். நானும் தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு அந்த திசை நோக்கி போனேன்.விழுந்த நிலையில் உள்ள Pier ஐ பார்த்த போதே அதற்கான காரணம் புரிந்துவிட்டது.

முதலில் அங்குள்ளவர்களிடம் யாருக்காவது அடி பட்டதா என்று விஜாரித்த போது யாரும் இல்லை என்று பதில் வந்ததால் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.கட்டுமானத்துறையில் இம்மாதிரி நிகழ்வுகள் சகஜம் என்பதால் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்துகொண்டு அனைவரும் அங்கிருந்த கான்கிரீட்டை அகற்றிவிட்டு முதலில் போக்குவரத்தை சரி செய்தார்கள்.இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருந்தாலும் வடபழனி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை.யாருக்கும் அடியில்லை போக்குவரத்து பாதிக்கப்படவில்லை இது பற்றி இனி கவலைப்படதேவையில்லை என்று CMRL இருந்துவிடவில்லை.இது எப்படி நடந்தது இனி இதுபோல் நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து அதற்கான வேலையில் இறங்கிவிட்டது.இந்த வேலையை குத்தகை எடுத்திருக்கும் நிறுவனத்துக்கு இது ஒரு பெரிய கெட்டபேரை கொடுக்கும் அதே சமயத்தில் இதை மறுபடியும் கட்ட ஆகும் நேரம் இக்குத்தகையை முடிக்க ஆகும் நேரத்தில் அதிகமாகக்கூடும்.

இம்மாதிரி நிகழ என்ன காரணம்? நிகழ்வு நடந்த இடத்தை பார்கையில் மிகச்சாதரணமாக அந்த இரும்பு Beam இல் இருக்கும் பற்றவைப்பின் தரம் தான் என்று அனுமானிக்கமுடிகிறது.தரமான பொறியாளர்களின் Investigation மூலம் வரும் முடிவுக்காக காத்திருப்போம். பற்றவைப்பின் தரம் என்று ஒற்றைசொல்லில் சொல்லி முடித்துவிடமுடியாது அதன் பின் 100 கேள்விகள் கேட்கப்படும்.பதிலுக்காக காத்திருப்போம்.

இந்நிகழ்வு நடந்த 10வது நிமிடத்தில் சன் தொலைக்காட்சியில் Flash News ஆக வருகிறது.ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது,நீக்கமற கலந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் பணி அளப்பரியாதது.அதோடு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இந்நிகழ்வை அலசியவிதமும் நன்றாக இருந்தது.





இம்மாதிரியான 5 பீம்கள் இருக்கும் போது இதுமட்டும் முறிய வேறு சில காரணங்கள் இருந்தால் விசாரணையின் போது தெரியக்கூடும்.

No comments: