Wednesday, October 10, 2012

தரம் குறைகிறது.

போன பதிவு.

இப்பதிவை படிப்பதற்கு முன் மேலே உள்ள பதிவை படித்தால் இன்னும் கொஞ்சம் சுலபமாக புரியுலாம்.
கட்டுமானத்துறையில் நிகழும் விபத்துகளும் அதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளும்,ஆராய்சிகளும் இன்றைய அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.அரசாங்க வேலையில் உள்ள இந்த அனுகுமுறை மறுமுறை இதே மாதிரியான நிகழ்வு நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க உதவும்.

விபத்து நடந்த வேலையை முதலில்  நிறுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது அதன் தொடர்பில் உள்ள வேலைகளும் நிறுத்தப்பட்டது.குத்தகைகாரர்களை வேறு இடங்களுக்கு மாற்றி அவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் நிகழ்வுகளை அமைத்துக்கொண்டார்கள்.மனித உயிர் இழப்பு இல்லாதது ஒரு பெரிய பணியை குறைத்தது.

குத்தகைக்காரர் உயரதிகாரிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நிகழ்ந்த சந்திப்பில் விபரம் தெரிவிக்கப்பட்டது.குத்தகைக்காரர் இதன் அத்தனை அம்சங்களையும் அலசி ஆராய்ந்து அறிக்கை  கொடுக்கும்படி பணிக்கப்பட்டது.அதே சமயத்தில் தரத்துக்கு பெயர் போன ஒரு அரசாங்க கல்வி நிறுவனத்துக்கு இதனை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்குமாறு பணிக்கப்பட்டது.No stones unturned.

எல்லா விரல்களும் இதன் மூல காரணம் தரமற்ற பற்றவைப்பு அதை கவனிக்க தவறி ஆய்வாளர் பக்கமே திரும்பியது.ஒரு ஆய்வறிக்கை தரமான Design இல்லாததையும் குறிப்பிட்டது.இதையெல்லாம் கவனத்தில்கொண்டு இருக்கும் இரும்பு சட்டத்தை மேம்படுத்தி,தேவைக்கு அதிகமாக முட்டு கொடுத்து, தாங்கும் சட்டத்தை உறுதிப்படுத்தினார்கள்.அதை முறையாக முதன்மை அதிகாரிக்கு சம்ர்பித்த பிறகே தொடர்ந்து வேலை செய்ய முடிந்தது, அதற்குள் 45 நாட்கள் போய்விட்டது.

இந்த 45 நாட்கள் சும்மாகவா இருந்தோம்? இல்லை. விழுந்த கான்கிரீட்டை உடைக்க வேண்டிய வேலையை ஆரம்பித்தோம்.கிட்டத்தட்ட 24 M3 அளவுள்ள கான்கிரீட்டை அந்த உயரத்தில் மனித வளம் மூலமாக உடைப்பது என்பது முடியக்கூடிய வேலை என்றாலும் மிகுந்த நேரம் பிடிக்கும் என்பதால் வேறு தொழிற்நுட்பத்தை நாடினோம்.அது தான் Diamond Cutter. இம்முறையில் கான்கிரீட்டை சும்மா கேக் வெட்டுவது போல் வெட்டி அப்படியே பாலம் பாலமாக கீழே கொண்டுவர வேண்டியது தான்.

செலவு அதிகம் என்றாலும் வேறு வழியில்லாததால் இம்முறையை கையாண்டோம், சில லட்சங்கள் காலியானது.இது குத்தைகைக்காரரின் எதிர்பாராத நஷ்டம்.வேலையாட்களின் தரம் மற்றும் மேற்பார்வையாளரின் தரம் அதோடில்லாமல் அதை உபயோகிப்பவரின் கவனக்குறைவு என்ற பலமுனை தரச்சோதனை தோல்வி அடைந்ததால் நிறுவன பெயருக்கு மேல் ஒரு கரும்புள்ளி விழுந்தது என்பதை மறுக்கமுடியாது.

நிகழ்வுகளின் சில படங்கள் கீழே...

வெல்டிங் விடுபட்ட இடம்.


கான்கிரீட் ஒரு பகுதி, உள்  இருக்கும் கம்பிகளால் விழாமல் இருக்கு.


வெட்டி எடுக்கப்படுகிறது.




வெட்டுப்பட்ட பகுதி.



மற்றொரு பகுதி...



தேவையான முட்டு அதிகரித்த பின்.




இப்படி பல நடவடிக்களை எடுத்த பின் கான்கிரீட் போட்டோம், ந்ல்ல வேளை ஒரு பிரச்சனையில்லாம் முடிந்தது.

இந்தியாவில் இது போல் பல நிகழ்வுகள் தினம் நடந்துகொண்டிருக்கலாம், இதற்கான விடிவு ஒருவரின் கையில் இல்லை. பல காலம் தூங்கிவிட்டோம் இனி இரவு,பகல் என்று பார்க்காமல் அலசி ஆராய்ந்து தகுந்த பயிற்சி கொடுத்து முன்னேற வேண்டும்.