நான் முதலில் சொல்லியிருந்தபடி பால வேலையில் Embankment என்ற மண் மேட்டை தான் முதலில் கட்டுவார்கள்.
அது முடிந்த நிலையில் அதன் மேல் நானும் திரு லி யூ கியும்.

லி யூ கீ என்பவர் எங்கள் பிராஜக்ட்டின் மேற்பார்வையாளர்(Clerk-Of-Works),இவர் ஓகே சொன்ன பிறகு தான் கான்கிரீட் மற்ற வேலைகளை செய்ய முடியும்.முதலில் நல்ல நண்பர்களாக இருந்து பிரியும் போது கொஞ்சம் மன வருத்தத்துடன் பிரிய வேண்டியிருந்தது.மன வருத்தம் எனக்கல்ல..அவருக்கு. கோபம் என் மீதல்ல எங்கள் கம்பெனி மீது.அதை பிறகு சொல்கிறேன்.
இந்த மண் மேடு கட்டுவதிலும் சில தொழிற்நுட்ப வேலைகள் உள்ளது.எப்படி பண்ணவேண்டும்,எத்தனை காலம் கழித்து எவ்வளவு உயரம் இறங்கியுள்ளது என்பன போல்.கட்டுமான பைபிளில் உள்ள மாதிரி செய்ய வேண்டும் என்றால் 300mm உயரத்துக்கு மேல் மண் கொட்டுக்கூடாது,அதை 10T ரோடு ரோலர் கொண்டு உருட்டவேண்டும்.மண் மேட்டின் மொத்த உயரத்துக்கும் சேர்த்து அவ்வப்போது அதன் டென்சிட்டி மற்றும் தண்ணீரின் அளவை சோதிக்க வேண்டும்.இந்த அவ்வப்போது எப்போது என்பதை இந்த பிராஜக்டின் ரெசிடென்ட் இஞ்சினியர் தான் முடிவு செய்வார்.எங்களுக்கு வந்தவர் நியூசிலாந்துகாரர் திரு ஜிம் பெக்கர்.ஒடிசலான தேகம்,சற்று வயது முதிர்ந்தவர்.
இந்த சரவாக் மாநிலத்தில் கோடைகாலத்திலேயே 2 நாட்கள் வெய்யில் அடித்தால், நிச்சயம் 3வது நாள் மழை இருக்கும்.இப்படிப்பட்ட இடத்தில் இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வேலை செய்வது கஷ்டம் என்றாலும் ஒரு மாதிரி சமாளித்து இந்த வேலையை முடித்தோம்.
மண் மேட்டுக்கு பிறகு உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய வேலை ஆற்றுக்கு நடுவே உள்ள தூண்கள்.இதைப்பற்றி போன பதிவில் சொல்லியிருந்தேன்.
ஆற்றின் நடுவே எப்படி வேலை செய்வது?
கடலிலும் ஆற்றிலும் வேலை செய்வது ஓரளவு சமமாக இருந்தாலும் கடல் வேலை கொஞ்சம் அதிக கஷ்டம்.
எந்த வேலையானாலும் தண்ணீரின் நடுவே செய்யும் போது சில வழிமுறைகளை கையாள்வார்கள்.
1.வேலை செய்யும் இடத்தில் ஒரு மணல் தீவை உருவாக்குவது
2.காஃபர் டேம் (Coffer Dam) நாங்கள் செய்தது 2வது முறை.
கீழே உள்ள படம் ஒரு பால வேலையில் நடைபெறுகிறது.(இணையத்தில் சுட்டது)
காஃபர் டேமை ஷீட் பைல் கொண்டு அமைத்த காட்சி (எங்கள் வேலையும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்)
ஷீட் பைல் முடித்த பிறகு மண் தோண்டும் காட்சி.(எங்கள் வேலையில் எடுத்தது அல்ல)

இது வெள்ளம் வந்து காஃபர் டேம்மை உருக்குலைத்த காட்சி(எங்கள் வேலையில் எடுத்தது அல்ல)

இது காஃபர் டேமின் உள்ளே எப்படி இருக்கும் என காட்டும் படம்.(எங்கள் வேலையில் எடுத்தது அல்ல)

இனி காஃபர் டேம் கட்டும்போது எடுத்த சில படங்களை பார்க்கலாம்.
பார்ஜ் (Barge) எனப்படும் மிதவை பாரம் தூக்கியுடன் உள்ளது அதை தண்ணீரில் நிலை நிறுத்த டக் போட்.இந்த டக் போட்(Tug Boat) அதிக வலுவுடன் கூடிய போட்(Boat).இதை அந்த தெப்பத்துடன் கட்டி எங்கு வேண்டுமோ அங்கு இழுத்துச்செல்வார்கள்.அந்த படம் கீழே.

மேலும் படங்களும் காஃபர் டேம் கட்டும் விபரம் அடுத்த பதிவில் தொடரும்.
4 comments:
நீங்கள் Discovery Travel and living ல் வரும் Monster house பார்பதுண்டா.. wed / thu night 10.00 to 11.00 வரும்.. வீட்டை ஒரு வாரம் அவங்க கிட்டே கொடுத்துட்டா.. அட.. நான் என்ன சொல்லறது.. கட்டுமான துறையிலே இருக்கீங்க.. பார்க்காமலா இருந்திருப்பீங்க ..? .. ?
வாங்க தீபா
இந்த நிகழ்ச்சியை பற்றி சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.இன்னும் பார்க்கவில்லை.
1 வாரம் என்றாலும் அதற்கான தேவைகளை முன்கூட்டியே முடிவு செய்து ஃபிட்டிங் வேலை மட்டும் அந்த 1 வாரத்தில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
கண்டிப்பா பாருங்க... I am sure you will like iட்
ok,நிச்சயமாக.
Post a Comment