ஒரே ஒரு தடவை மட்டுமே போயிருந்தாலும் கொஞ்சம் முயற்சித்து கண்டுபிடித்துவிட்டேன்.
இது பேருந்து நிலையம்.

இது வரதராஜப்பெருமாள் கோவில்.

வேறு இடங்களுக்கு போகவில்லை என்பதால் தெரியவில்லை.
வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம் முடிந்ததும் மண்டபத்துக்கு வந்து பால்ய சினேகிதனுடன் பேசி,சாப்பிட்டு விட்டு சுமார் 11 மணிவாக்கில் கிளம்பினோம்.சென்னைக்கு போக பேருந்து எங்கு வரும் என்று கேட்டபோது,பக்கத்தில் சத்திரம் என்ற நிறுத்தம் உள்ளது என்றும் தடம் எண் 79 வரும் என்று சொன்னார்கள்.
சரி என்று கேட்டுவிட்டு கொஞ்சம் தூரம் வந்து ஒரு பொட்டிக்கடையில் குடி நீர் பாட்டில் ஒன்று வாங்கிக்கொண்டு திரும்பவும் சென்னை பஸ் வரும் இடம் கேட்டோம்."அதோ அந்த மரத்தடி பக்கத்தில் நில்லுங்கள்" என்று சொன்னார்.
அங்கு வந்த போது கீழே உள்ள பலகையை பார்த்தேன்.ஒரு சத்தமும் கேட்கவில்லை.சாப்பாட்டு நேரம் நெருங்கிவிட்டது என்பதால் என்னவோ!


பஸ் வரும் நிலையில் ஒரே ஒருவர் அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்து வந்து பூட்டி விட்டு வெளியே போனார்.
கொஞ்ச நேரத்தில் வந்த பஸ் நிற்காமலே போக,அடுத்த பஸ் சில வினாடிகளில் வந்தது.உட்கார இடமில்லை.
நடத்துனர்,அவர் நாக்கை தொட்டு டிக்கெட்டை கையில் வைத்துக்கொள்வதா பையில் போடுவதா என்று யோசித்துவிட்டு பையிலேயே போட்டுக்கொண்டேன்.சில வினாடிகள் அவரைப்பற்றியே நினைவு.ஏன் இந்த பழக்கம் இவர்களிடம் இருந்து போகமாட்டேன் என்கிறது?இதை மாற்றமுடியாதா? என்று.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு 12B பஸ்ஸில் ஒரு நடத்துனர் மோதிரம் மாதிரி ஒன்றை போட்டுக்கொண்டு அதன் மேல் பக்கத்தில் ஒரு ஸ்பான்ஜில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு அதைத் தொட்டு தொட்டு சீட்டு கொடுப்பார்.
நமக்கோ இங்குள்ள நிலைமை ஓரளவு தெரியும்.வெளிநாட்டவர்களுக்கு? ஒரளவு வெருப்பே மிஞ்சும்.அரசாங்கம் இந்த மாதிரி சில சின்னச்சின்ன பாடங்கள் இவர்களுக்கு எடுக்கவேண்டும்.நாட்டு நலனுக்கு முக்கியம்.
காஞ்சிபுரம்-- தாம்பரம் டிக்கெட் விலை 16 ரூபாய்,சுமார் 50 கி.மீட்டர் தூரம்.
தாம்பரம் நெருங்கும் நேரத்தில் ஏதோ காரணமாக,ஓட்டுனர்,வாகன நெரிசல் என்று தெரிந்துகொண்டு "ஆட்டோ" மாதிரி ஏதோ ஒரு குறுக்குத்தெருவில் புகுந்து வெளிவந்தார்.
அங்கிருந்து பழவந்தாங்கல் வந்து,வெயில் அதிகமாக இருந்ததால் ஒரு ஆட்டோவை எடுத்து 1 கி.மீட்டர் உள் இருக்கும் இடத்தை சொன்னவுடன் ரூபாய் 20 என்றார்.
நான் இங்கிருந்த காலத்தில் போன சில இடங்களும் வாடகைகளும்.
விமானநிலையம் --- விருகம்பாக்கம் = ரூபாய் 200
விருகம்பாக்கம் -- வளசரவாக்கம் =ரூபாய் 40
விருகம்பாக்கம் -- நங்கநல்லூர் = ரூபாய் 150.
நங்கநல்லூர் -- நுங்கம்பாக்கம் = ரூபாய் 160.
வேறு வழியில்லாமல் கொடுக்க நேர்ந்தது.
3 comments:
எங்களையும் கோயிலுக்குக் கூட்டிட்டுப்போனதுக்கு நன்றி.
பல்லியை வருடலையா?
நாலைஞ்சு நாளா இங்கே வரலை(-:
படங்கள் நல்லா இருக்கு.
வாங்க துளசி
வீட்டு பல்லி என்றாலும்...ஜாக்கிரதை.நீங்க தடவுகிறதை தவறாக எடுத்துக்கொண்டு,வாலை விட்டுவிடப்போகிறது.:-))
கோவிலில் உள்ள பல்லிக்கு கண்ணை கானோம்.தடவும் போது அதையும் சேர்த்து அழுத்தி தடவிட்டாங்க போலும்.
Post a Comment