ஏழாவது நாளில் செய்யப்படும் சோதனையில் அதன் நிர்ணயப்பட்ட அளவில் சுமார் 80 விழுக்காடு இருக்கனும்.28 நாட்களில் அதன் தர நிர்ணய அளவை அடைந்துவிடவேண்டும்.பொதுவாக 7 நாளிலேயே 28 நாள் அளவை அடைந்துவிடும்.
இந்த குயூபின் அளவு 150x150x150 மி.மீட்டர்.இதனுள், வண்டியில் வரும் கான்கிரீட்டில் இருந்து கொஞ்சம் எடுத்து சிறிது சிறிதாக போட்டு அதற்கென்று உள்ள கம்பியால் குத்தி பிறகு சமப்படுத்துவார்கள்.இது போட்டு முடிந்த பிறகு 24 மணி நேரம் கழித்து பிரித்து எடுத்து தண்ணீரில் ஊற வைப்பார்கள்.

பட உதவி: இணையம்.
சிறிய வீடுகளில் போடப்படும் கான்கிரீட் அளவு குறைவு என்பதால் இப்படிப்பட்ட சோதனைகள் செய்வதில்லை.தரமான கான்கிரீட்தானா என்பதை நிர்ணயம் செய்துகொள்ள இது தான் முதற்படி.
2 comments:
ஒரு வேளை அது சரியா இல்லேன்னா? 24 நாள் கழிச்சு போட்ட கான்க்ரீட்டை உடைப்பீங்களா?
ஆமாம் திவா.
24 நாளில் டெஸ்டில் காலைவாரினால் 90% உடைக்கவேண்டும் என்ற நிலை தான் வரும்.
Post a Comment