இந்த முறையில் தரைக்கு கீழே உள்ள தண்ணீர் மட்டத்தை நாம் வேலை செய்யப்போகும் நிலைக்கு கீழே கொண்டு செல்லமுடியும். எப்படி?வாங்க பார்க்கலாம்.
இதற்கு தேவை சில பிளாஸ்டிக் பைப்புகள்,இணைப்பு பைப்புகள் ஒரு சிறந்த பம்ப்,அவ்வளவு தான்.
செயல்முறை:கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
தண்ணீர் மூலம் நாம் அடையவேண்டிய ஆழத்துக்கு ஒரு துளை போடவேண்டும்.அந்த தண்ணீர் வேகம் இருக்கும் போதே நீலக்கலரில் இருக்கும் பைபையும் சொருகிவிடவேண்டும்.இது மிக எளிதான பணி.பைபை வைத்தவுடன் தண்ணீரை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பைபை சுற்றி சிறிது ஜல்லி(10மி.மீட்டர் அளவு) கொட்டவேண்டும்.
கீழே உள்ள படம் தான் அந்த பிளாஸ்டிக் பைப்பின் மண்ணுக்கு அடியில் இருக்கும் பகுதியை காண்பிக்கிறது.பெரிதாக்கி பாருங்கள் அந்த பைப்பில் 2 மி.மீட்டர் கணத்துக்கு வெட்டிவிட்டிருப்பார்கள்.இது தண்ணீர் அந்த பைப்பினுள் போவதற்கு உண்டான வழியை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
கீழே உள்ள படம் சில பைப்புகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையை காண்பிக்கிறது.
இப்போது இந்த பைப்புகளை ஒரு பெரிய பைப் மூலம் இணைக்கவேண்டும்.முக்கியமாக வெளிக்காற்று இந்த பெரிய பைப்பினுள் போகக்கூடாது.
இப்போது சிறிய பைப்பை பெரிய பைபுடன் இணைத்துவிட்டார்கள்.
இது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட படம்.
இதே முறையை நான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு காக்கிநாடாவில் பார்த்திருக்கேன்,அப்போது படம் எடுக்கும் கருவியில்லாத்தால் விரிவாக சொல்லமுடியவில்லை .
2 comments:
உங்க துபாய் பதிவுகள் எல்லாம் தொடர்ந்து படிச்சுக்கிட்டே வர்றேன்.
அமர்க்களமான படங்களோட வருது.
இந்த நீலக்குழாய்களில், மண்ணில் புதைச்சுத் தண்ணீர் அதுலே வெளியாகும்போது மண் கரைஞ்சு ஒட்டிப்பிடிச்சு அடைப்பு வந்துராதா?
வாங்க துளசி
தண்ணீருடன் மண் கலக்காமல் இருக்கத்தான் சிறிது ஜல்லியை பிப்பின் வெளியே கொட்டிவிடுவார்கள், அதனுடன் அந்த நீல நிற பைப்பில் வெட்டப்படும் அளவு வெறும் 2 மிமீட்டர் தான்.
ஹூம்! இந்த துறையில் இருப்பவர்களுக்கு கூட இந்த மாதிரி சந்தேகம் வராது! :-)
Post a Comment