Tuesday, January 1, 2008

Botanic Garden

விடுமுறை என்று அதுவும் இரண்டு நாட்கள் சேர்ந்தால் போல் வந்தால் மிகவும் திணற வேண்டிவரும் இங்கே,அதுவும் எனக்கு.வெளியில் சுற்றுவதில் அவ்வளவு நாட்டம் இல்லை ஏனென்றால் தேவையில்லாமல் செலவு செய்யவேண்டும் என்பது முதல் காரணம் அடுத்ததாக தேவையில்லாமல் நம்மை அதில் ஈடுபடுத்திக்கொள்வது.

எது எப்படியோ, போன பதிவில் சிங்கையை சுற்றியதைப்பற்றி எழுதிய போது நமது பதிவர் துளசி பொட்டானிகல் கார்டன் போகவில்லையா? என்று கேட்டிருந்தார்.வந்த 13 வருடங்களில் அந்த பக்கம் போய் பார்க்கவில்லை.

சரி இப்போது இவ்வளவு நாள் விடுமுறை கிடைத்திருக்கும் நேரத்தில் அங்கு போய்வரலாம் என்று இன்று மதியம் 2.30 மணிக்கு கிளம்பி ஆர்சட் MRT எனும் ரயில் சேவை நிலையத்துக்கு போய் சேர்ந்தேன்.அங்கிருக்கும் வழிகாட்டியில் எந்த இடத்துக்கு எப்படி போக வேண்டும் என்று விரிவாக இருந்ததால் அவர்கள் சொல்லியபடி "B" வெளியேறும் வழியாக வந்தேன்.பேருந்து நிலைய எண் 3 சாலையின் மறுபக்கம் இருந்ததால் சாலை விளக்கு சிகப்புக்கு மாறும் வரை காத்திருந்தேன்.அப்போது தான் பார்த்தேன் அந்த ரயில் சேவை நிலையத்துக்கு மேல் பெரிய ஸ்டீல் தூண்கள் நிறுத்தப்பட்டு கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்தது.இது Top Down முறையில் நடைபெறுவதாக தோனுகிறது.படம் கீழே.



தடம் எண் 123 யில் ஏறி 6 வது நிறுத்ததில் இறங்கினால் எதிர்புறம் தான் இந்த தோட்டம் இருக்கிறது.அதிக வெயில் இல்லாமல் கொஞ்சம் மேக மூட்டம் மற்றும் சுகமான காற்றும் இருந்ததால் அவ்வளவு களைப்பு ஏற்படவில்லை.



பலவிதமான செடிகள்/பூக்கள்/மரங்கள் இருந்ததன.ஒவ்வொன்றுக்கும் அதன் உண்மை பெயரும் வழக்கு பெயரும் கொடுத்திருந்தார்கள்.இது பாம் மரமாம்.மலேசியாவில் இது அதிகம்.



முழுவதும் நடந்தே காணவேண்டியிருப்பதால் அங்கங்கு நிறைய வழிகாட்டி படங்கள் மற்றும் கழிப்பறைகளும் உள்ளன.

கீழே உள்ள இடத்துக்கு மேல் ஏறி வரும் போது இந்த வியூவில் அழகாக இருந்தது.CVR பார்த்தால் இன்னும் மெருகேற்றி கொடுப்பார்.அதற்கு இப்போது நேரம் இல்லாததால் அப்படியே பாருங்கள்.



இன்னும் சில படங்கள் இருப்பதால் அதை அடுத்த பதிவில் போடுகிறேன்.

6 comments:

CVR said...

ஹஹா
படங்கள் நன்றாகத்தான் இருக்கிறது அண்ணாச்சி!! :-)
கடைசி படத்தில் சாலையை வெட்டாமல் முழுமையாக படம் பிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!! :-)

துளசி கோபால் said...

Lodoicea maldivica என்னும் தாவரப்பெயரில் டபுள்கோகொநட் மரம் இருக்கே அதைப் பார்க்கலையா?

ஒரு இளநீர் 44 பவுண்ட் எடை இருக்கும்.

இலவசக்கொத்தனார் said...

குமார், சுற்றிப் பார்க்கச் சென்றாலும் தொழில் ஞாபகம்தானா? :)) அது போகட்டும் அது என்ன சுற்றிப் பார்க்க ஆர்வமில்லாமல்? செலவு எதாவது ஒரு வழியில் செஞ்சுக்கிட்டுதானே இருக்கோம்? உள்ளூர் வெளியூர் அப்படின்னு நல்லா எல்லா இடமும் சுற்றிப் பாருங்கய்யா.

சௌ.பெருமாள் said...

வாங்க CVR
அந்த படம் எடுக்கும் போது மூன்று விஷயங்களை உள்ளே இருக்குமாறு பார்த்தேன்
வீடு
பக்கத்தில் உள்ள மரம்
வழிகாட்டி
அதில் சாலை விட்டுப்போய்விட்டது.
சரி அடுத்தவாட்டி போகும் போது எடுத்திடுவோம்.

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
சுத்துவதற்கு காலில் சக்கரம் தேவை.அந்த மரம் கண்ணில் படவில்லை.அடுத்து வரும் சைனிஸ் நியூ இயர் விடுமுறையில் போய் பார்த்துவிடுவோம்.

சௌ.பெருமாள் said...

வாங்க இ.கொத்தனார்
வேலையிலேயே ஊரை சுற்றிவிடுவதால் இதெற்கென்று தனியாக சுற்ற மனம் வரவில்லை.
யார் கண்டா? இனிமேல் தான் வருமோ என்னவோ.